ஸ்கோடா இந்தியா அதன் குஷாக் மற்றும் ஸ்லேவியாவில் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், குஷாக் ஓனிக்ஸ் ப்ளஸ் மற்றும் ஸ்லேவியா  ஆம்பிஷன் ப்ளஸ் ஆகிய இரு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இரண்டுமே, குறுகிய காலத்துக்குப், பண்டிகைக்கான விலையில், புதிய எக்ஸ்சேஞ்ச் பலன்கள் மற்றும் சிறப்பு கார்பொரேட் திட்டங்களுடன் வந்துள்ளன.

குஷாக் ஓனிக்ஸ் ப்ளஸ்ஸில், புத்தம் புதிய ஆர்16 க்ரஸ் அல்லாய் மற்றும் விண்டோ க்ரோம் கார்னிஷ் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்க க்ரில் ரிப்ஸ் மற்றும் பின்பக்க ட்ரங்க் கார்னிஷ் ஆகியவை இப்போது முழுவதும் க்ரோமில் வருகிறது. ஓனிக்ஸ் ப்ளஸ் 1.0 டிஎஸ்ஐ ஆற்றல் கொண்ட எஞ்சின் மேனுவல் டிரன்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  குஷாக் ஓனிக்ஸ் ப்ளஸ் மேனுவல் விலை ரூ 11.59 லட்சம் மற்றும் பிரத்யேகமாக கேண்டி வொயிட் மற்றும் கார்பன் ஸ்டீல் வண்ணங்களில் மட்டுமே கிடைக்கும்.

முன்பக்க க்ரில், கதவின் கீழ்ப்பக்கம், ட்ரங்க் கார்னிஷ்  ஆகியவை க்ரோம் பேக்கேஜுடன் ஸ்லேவியா ஆம்பிஷன் ப்ளஸுக்கு அழகு சேர்க்கின்றன. அனைத்து நிற மகிழுந்துகளிலும் பில்ட் இன் டேஷ்கேம் பொருத்தப்பட்டுள்ளது. குஷாக் ஓனிக்ஸ் ப்ளஸ் போன்றே, ஸ்லேவியா ஆம்பிஷன் ப்ளஸிலும், பிரத்யேக 1.0 டிஎஸ்ஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பண்டிகைக் கால சிறப்புச் சலுகையாக ஸ்லேவியா ஆம்பிஷன் ப்ளஸ் மேனுவல் ரூ 12.49 மற்றும் ஆட்டோமேடிக் ரூ. 13.79 லட்சங்களுக்குக் கிடைக்கும் என ஸ்கோடா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form