சிப்லாவின் ஆஸ்துமா விழிப்புணவு டிஜிட்டல் பிரச்சாரம்

 


சிப்லா லிமிடெட்டின் #பெரோக்ஜிந்தகி பார்ட்னர்கள், இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பாக்கெட் ஏசஸ் உடன் இணைந்து, பிளாட்ஃபார்மின் முன்னணி ஷார்ட் ஃபார்ம் கண்டண்ட்  சேனல் - ஃபில்டர் காஃபிக்காக பல திட்ட குறிப்பு வரைவுகளை உருவாக்குகிறது. தனித்துவமான கதைகளை உருவாக்கி, விரிவுபடுத்துவதில் பாக்கெட் ஏசஸின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதன் மூலம், சிப்லா - ஆஸ்துமா பற்றிய கட்டுக்கதைகளை போக்குதல், இன்ஹேலர்  பயன்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் ஆஸ்துமா நோயாளிகளை பேரோக் ஜிந்தகி (சுதந்திரமான வாழ்க்கை) வாழ தூண்டுதல் போன்ற தனது மிகப்பெரிய பொது மற்றும் நோயாளி விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கத்தை மேலும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறது. 

இந்த கூட்டாண்மை, ஒரு முக்கியமான செய்தியை துல்லியமாக, மனதில் பதியும் வகையில் எடுத்துக்கூற தொடர்புடைய கதைசொல்லல் முறையைப் பயன்படுத்தும் அல்டர்நேடிவ் கண்டண்ட் ஃபார்மெட்டுகளுக்குள்  மருந்து நிறுவனங்கள் நுழைந்துள்ளதைக் குறிக்கிறது. இந்தத் தொடரின் முதல் வீடியோ பில்டர் காஃபியின் யூடியூப் சேனலில் திரையிடப்பட்டது.


எளிதில் உட்கொள்ளக்கூடிய சிற்றுண்டி மற்றும் பகிரக்கூடிய வடிவங்களில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு வீடியோவும் சிப்லாவுடன் இணைந்து பில்டர் காஃபியில் உள்ள கிரியேட்டிவ் குழுவால் எழுதப்பட்ட இதயத்தைத்  தொடும் வகையில் 'ஸ்லைஸ்-ஆஃப்-லைஃப்' கதையைச் சொல்லும். முதல் பிரீமியர் மும்பை பருவமழையின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு வசீகரமான காதல் கதையாகும். இது பார்வையாளர்கள் விரும்பும் வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஆஸ்துமா நோயாளிகளுக்கு பருவமழையானது எந்தவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டும். 

 இருப்பினும், மருத்துவர் பரிந்துரைத்த முறையான சிகிச்சை முறைகளினால் ஆஸ்துமா உள்ளவர்களும் மழைக்காலத்தை முழுமையாக அனுபவிக்க முடியும் என்பதை நுட்பமான கதாபாத்திரங்களின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த படம் வலியுறுத்தி கூறுகிறது. அனைத்து படங்களும் ஃபில்டர் காஃபியின் சமூக ஊடக சேனல்கள் மூலம் பரவலாக்கப்படும். இது, 6 மொழிகளில் கிடைப்பதுடன், 'டிஜிட்டல் ஜிஇசியின் 22+ மில்லியன் பார்வையாளர்களைச்  சென்றடையும், என்று சிப்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form