இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. இந்த நாளில் இந்திய தேசியக் கொடி அல்லது மூவர்ணக் கொடியை ஏற்றி, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துதல், மூவர்ண அலங்காரங்கள் செய்தல், மூவர்ண ஆடைகளை அணிதல், தேசபக்தி திரைப்படங்களைப் பார்ப்பது மற்றும் பலவற்றின் மூலம் நாடு முழுவதும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக நமது தலைவர்கள் செய்த தியாகங்கள், உயிர் இழந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் பலவற்றைக் நாடெங்கும் மக்கள் கொண்டாடுகின்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி, என்எஸ்இ, நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷிஷ்குமார் சவுகான், “அனைவருக்கும் தனது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நாளில் இறையாண்மை மற்றும் வளமான இந்தியாவைக் கற்பனை செய்த நமது தேசத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் மற்றும் பங்களிப்பை நினைவு கூர்வோம். முன்னணி உலகப் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் நாம் மாற்றம், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டின் உச்சத்தில் நிற்கிறோம். எப்போதும் மீண்டும் எழுச்சி பெறும் இந்தியாவின் உணர்வை எதிரொலிக்கிறோம். என்எஸ்இ மூலதனச் சந்தை உருவாக்கம், தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் மேலும் முதலீட்டாளர்களை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளில் கவனம் செலுத்தும்” என்றார்.