மதுரையில் ஆகாஷ் பைஜுவின் ANTHE 2023 ஸ்காலர்ஷிப் தேர்வு தேதி அறிவிப்பு

 


ஆகாஷ் பைஜுஸ் மிக பிரபலமான ஆன்தே  தேர்வின் 14-வது பதிப்பு (ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் -2023) நடைபெறவிருப்பதை  அறிவித்திருக்கிறது.  100 சதவிகிதம்  வரை ஸ்காலர்ஷிப்களையும் மற்றும் சிறப்பான ரொக்க விருதுகளையும் பெறும் வாய்ப்புடன் தங்களது திறனை 7-12 - ம் வகுப்பு மாணவர்கள் வெளிப்படுத்த இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது.   ஆன்தே 2023 ஸ்காலர்ஷிப் குறித்து ஆகாஷ் பைஜூஸ் தமிழ்நாடு, மூத்த உதவி இயக்குநர் உலகநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். ஆகாஷ் பைஜூஸ் மதுரை பைபாஸ் கிளைத் தலைவர் நாகராஜன்,ஆகாஷ் பைஜூஸ் தமிழ்நாடு, தலைவர்  மலர்செல்வன், ஆகாஷ் பைஜூஸின் தமிழ்நாடு ஆர் எஸ்ஜிஎச்  பிரதீப் உன்னிகிருஷ்ணன், மக்கள் தொடர்பு தலைவர் வருண்சோனி மற்றும் மதுரை சின்ன சொக்கிகுளம் கிளைத் தலைவர் ஆர்.கே அருண் ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர். 

இந்தியாவின் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறைகளிலும் 2023 அக்டோபர் 7-15 நாட்களில், ஆன்தே 2023 நடைபெறுகிறது.   ஆன்லைன் முறையிலான ஆன்தே தேர்வு, தேர்வு நாட்கள் அனைத்திலும் காலை 10:00 முதல் இரவு 09:00-க்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் . ஆஃப்லைன் - நேரடி தேர்வுகள் 2023 அக்டோபர் 8 மற்றும் 15-ம் தேதிகளில் நாடெங்கிலும் உள்ள ஆகாஷ் பைஜு - ன் அனைத்து 315க்கும் அதிகமான  மையங்களிலும் காலை 10:30 - 11:30 மற்றும் மாலை 04:00 - 05:00 மணி என்ற இரு ஷிப்ட்களில் நடத்தப்படும்.  

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தமிழ்நாட்டின் மூத்த உதவி இயக்குனர் உலகநாதன் பேசுகையில், " கனவுகள் மற்றும் சாதிக்கும் திறன்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம் இலட்சக்கணக்கான மாணவர்களின் பேரார்வங்களை பூர்த்தி செய்யும் வினையூக்கியாக ஆன்தே  இருந்து வருகிறது. ஆன்தே 2023 நிகழ்வில், மாணவர்களின் மிக அதிக பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  சிறப்பான எதிர்காலத்திற்கு நெருக்கமாக மாணவர்களை கொண்டு செல்லும் எமது செயல்திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form