ஷாவ்மி இந்தியாவின் நேரடி விற்பனை இருப்பை விரிவாக்கம்

 


நாட்டின் மிகவும் விரும்பப்படும் மற்றும் நம்பகமான ஸ்மார்ட்போன் எக்ஸ் ஏஐஒடி பிராண்டான  ஷாவ்மி   இந்தியா (Xiaomi India), அதன் சில்லறை விற்பனையை வலுப்படுத்தும் வகையில் கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், கரூர், தென்காசி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் ஒரே நாளில் 10 புதிய எம்ஐ ஸ்டோர்களை திறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த நேரடி விற்பனை மையங்களை விரிவாக்கியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவம் கிடைப்பதோடு, ஷாவ்மி இந்தியா பிராண்டின் பல்வேறு ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போன்கள், பட்ஜெட்டுக்கு ஏதுவான ஸ்மார்ட்போன்கள் மற்றும் பல லைஃப்ஸ்டைல் தயாரிப்புகள் குறித்த ஒரு ஆழமான புரிதலும் கிடைக்கிறது.

இந்த புதிய எம்ஐ ஸ்டோர்கள் ரீடெயில் அனுபவத்தை முற்றிலும் புதியதொரு நிலைக்கு எடுத்துச்செல்லப் போகிறது. இங்கு கிடைக்கும் இன்டராக்டிவ் டெமோக்கள் மற்றும் நிபுணர் வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம், வாடிக்கையாளர்கள் ஷாவ்மியின் நவீன தொழில்நுட்பங்களைப் புரிந்துகொள்வது மற்றும் அனுபவித்து உணர்வது மட்டுமில்லாமல், மன நிறைவுடன் கூடிய ஒரு ஷாப்பிங் அனுபவத்தையும் இந்த ஸ்டோர்களில் பெற்று மகிழலாம் என ஷாவ்மி இந்தியா செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form