எஸ்ஐபி அகாடமி இந்தியா தனது 20வது ஆண்டு விழாவை சமீபத்தில் சென்னை தரமணியில் உள்ள தாஜ் வெலிங்டன் மியூஸில் கொண்டாடியது. ஆகஸ்ட் 2003இல் எஸ்ஐபி-யானது அபாகஸ் திட்டத்தின் 20 மையங்களுடன், 5 பணியாளர்கள் மற்றும் 5 பகுதி கூட்டாளர்களுடன் பயணத்தைத் தொடங்கியது. தற்போது 350 நகரங்கள், 950 உரிமையாளர்கள், 5000 ஆசிரியர்களுடன் குழந்தைகளின் திறன் மேம்பாட்டில் முன்னணி நிறுவனமாக வளர்ந்துள்ளது.
11 நாடுகளில் 1000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மற்றும் 240 பணியாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்துள்ளது. எஸ்ஐபி அகாடமியின் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சியின் மூலம் 1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர். எஸ்ஐபி அகாடமி எப்போதுமே ‘குழந்தைகளை மனதில் வைத்து’ திட்டங்களை உருவாக்கி, கல்வியில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் பிற துறைகளிலும் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்களை கற்க உதவுகிறது என எஸ்ஐபி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.