தேர்வுக்கு தயாரிப்பதற்கான சேவைகள் துறையில் நாடளவில் முதன்மை வகிக்கும் ஆகாஷ் பைஜு, மிக பிரபலமான ஆன்தே தேர்வின் 14-வது பதிப்பு (ஆகாஷ் நேஷனல் டேலன்ட் ஹண்ட் எக்ஸாம் -2023) நடைபெறவிருப்பதை அறிவித்திருக்கிறது. 100 சதவிகிதம் வரை ஸ்காலர்ஷிப்களையும் மற்றும் சிறப்பான ரொக்க விருதுகளையும் பெறும் வாய்ப்புடன் தங்களது திறனை 7 முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் வெளிப்படுத்த இந்த வருடாந்திர ஸ்காலர்ஷிப் தேர்வு வாய்ப்பினை வழங்குகிறது.
கோவையில் ஆகாஷ் பைஜூஸ் ஆன்தே 2023 ஸ்காலர்ஷிப் குறித்து துணை இயக்குனர் குடே சஞ்சய் காந்தி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். உடன் உதவி இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி, வர்த்தக தலைவர் ராம்கி, பிஆர் தலைவர் வருண் சோனி, கிளை மேளாலர்கள் கோபிநாத், செந்தில்குமார் ஆகியோர் இருந்தனர்.
ஆன்தே ஸ்காலர்ஷிப்பை வெல்பவர்கள், ஆகாஷ் கல்வி நிறுவனத்தில் பல்வேறு தேர்வுகளுக்கு தயாரிக்கவும், போட்டித் திறனுள்ள ஸ்காலர்ஷிப்களுக்கு தகுதி பெறவும் நிபுணத்துவ வழிகாட்டலையும், ஆலோசனையையும் பெறலாம். இந்தியாவின் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிமுறைகளிலும் 2023 அக்டோபர் 7 முதல் 15ம்தேதி வரை ஆன்தே 2023 நடைபெறுகிறது. 100 சதவிகிதம் வரையிலான ஸ்காலர்ஷிப்களுக்கும் கூடுதலாக, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் ரொக்கப் பரிசுகளையும் பெறுவார்கள்.
ஆன்லைன் முறையிலான ஆன்தே தேர்வு, தேர்வு நாட்கள் அனைத்திலும் காலை 10:00 முதல் இரவு 09:00-க்கு இடைப்பட்ட நேரத்தில் நடைபெறும் . ஆஃப்லைன் - நேரடி தேர்வுகள் 2023 அக்டோபர் 8 மற்றும் 15-ம் தேதிகளில் நாடெங்கிலும் உள்ள ஆகாஷ் பைஜு - ன் அனைத்து 315க்கும் அதிகமான மையங்களிலும் காலை 10:30 - 11:30 மற்றும் மாலை 04:00 - 05:00 மணி என்ற இரு ஷிப்ட்களில் நடத்தப்படும். தங்களுக்கு வசதியான ஒரு மணி நேர ஸ்லாட் - ஐ மாணவர்கள் தேர்வு செய்யலாம்.
மாணவர்களின் கிரேடு மற்றும் ஸ்ட்ரீம் விருப்பங்களின் அடிப்படையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பல விருப்பத்தேர்வுகளை கொண்டிருக்கும் 40 கேள்விகளையும் மற்றும் அதற்கு மொத்தத்தில் 90 மதிப்பெண்களையும் கொண்ட தேர்வாக ஆன் தே நடத்தப்படும்.
தேர்வு சேர்க்கைக்கான படிவத்தை சமர்ப்பிப்பதற்கான இறுதித்தேதி, ஆன்லைன் தேர்வு தொடங்குவதற்கு முன்பு மூன்று நாட்கள் மற்றும் ஆஃப்லைன் தேர்வுக்கு முன்னதாக ஏழு நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆஃப்லைன் வழிமுறை தேர்வுக்கான கட்டணம் ரூ.100 எனவும் மற்றும் ஆன்லைன் முறைக்கு கட்டணம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வின் முடிவுகள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 அக்டோபர் 27 அன்றும், 7 முதல் 9 - ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2023 நவம்பர் 3-ம் தேதியன்றும், 11 மற்றும் 12 - ம் மாணவர்களுக்கு 2023 நவம்பர் 08 அன்றும் அறிவிக்கப்படும்.
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் துணை இயக்குனர் குடே சஞ்சய் காந்தி , பேசுகையில், " கனவுகள் மற்றும் சாதிக்கு; திறன்களுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம் இலட்சக்கணக்கான மாணவர்களின் பேரார்வங்களை பூர்த்தி செய்யும் வினையூக்கியாக ஆன்தே இருந்து வருகிறது. ஆன்தே 2023 நிகழ்வில், மாணவர்களின் மிக அதிக பங்கேற்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிறப்பான எதிர்காலத்திற்கு நெருக்கமாக மாணவர்களை கொண்டு செல்லும் எமது செயல்திட்டத்தில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்” என்றார்.