ஆல்கே மூலக்கூறுகளை ஆராய்ந்து தர நிர்ணயம் செய்யும் சிவப்பு கடல் ஆல்கா ஆராய்ச்சி நிறுவனம் தொடக்கம்



இந்தியாவில் முதல் முயற்சியாக, "உலகளாவிய சிவப்பு கடல் ஆல்கா ஆராய்ச்சி நிறுவனம்" ஜூன் மாதம் 26, 2023 அன்று கும்பகோணத்தில் துவங்கப்பட்டது.  தொடக்க விழாவில், தருமையாதீனம் கயிலை மாசிலாமணி, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவருமான கே.அன்பழகன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம்,ஸ்கைவின் குழுமங்களின் தலைவர் மோகன், சன்மேக் ஆக்ரோவின் நிர்வாக இயக்குநர் அமுதா மோகன் மற்றும் முன்னணி விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் கடல்சார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். 

இதில் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த கடல் வாழ் சூழலியல் நிபுணராகவும், இருபத்தி ஒரு நாடுகளில், கடல் தாவர வளங்கள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில், முப்பது வருடம் அனுபவம் பெற்றவருமான  முனைவர். தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

இந்நிறுவனத்தில் பல்வேறு வேளாண், கடல் சூழலியல், மூலிகை ஆராய்ச்சி வல்லுநர்கள், தொழில் முனைவோர் மேலாண்மை குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் 800 கும் மேற்பட்ட சிவப்பு கடல் ஆல்கா விவசாயிகளும், வணிகர்களும், நுகர்வோரும், திரளாக கலந்து கொண்டனர்.

தெய்வ ஆஸ்வின் ஸ்டான்லி பேசும் போது "இந்திய கடற்பரப்பில் வளர்க்கப்படும் சிவப்பு கடல் ஆல்கேவிற்கு உலக சந்தையில் பெரும் வாய்ப்பு உள்ளது. உலக சிவப்பு கடல் ஆல்கே வியாபாரம் பல்லாயிர கோடிகள் புழங்கும் சந்தையாகும். இந்திய சிவப்பு ஆல்கேயில் அமைந்திருக்கும் மூலக்கூறுகளை ஆராய்ந்து தர-நிர்ணயம் செய்து பட்டியலிடுவது பெரிய சவாலாகவும், தேவையாகவும் இருக்கிறது என்று கூறினார்".

ப்ரஸ்மோ அக்ரி நிறுவனம் சுமார் பத்து வருடங்களாக, 20,000 டன் வளர்க்கப்பட்ட சிவப்பு கடல் ஆல்காவை விவசாய குழுக்களிடமிருந்து வாங்கி வேளாண் மற்றும் உணவு சார்ந்த  பொருட்களை உற்பத்தி செய்து உள்ளூர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசன்னா மோகன் பேசும் போது நாங்கள் உற்பத்தி செய்யும் சிவப்பு கடல் ஆல்கே பொருட்களுக்கு  உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும்  நல்ல வரவேற்பு உள்ளது. எனவே சாகுபடிக் கடற்பரப்பை  அதிகப்படுத்த வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கிழக்கு கடற்கரைகளில் வளர்க்கப்படும் சிவப்பு கடல் ஆல்கேயின் மகசூல் மற்றும் தரம் சமீபகாலங்களில் குறைந்து வருகிறது. இதனை சார்ந்துள்ள கடல் வேளாண் மக்களின் வாழ்வாதாரமும்,  வணிகமும், பாதிக்கப்படுகிறது என கூறினார்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form