இந்தியாவின் மிகப் பெரிய கற்றல் தளமான அன்அகாடமி 2023 ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகளில் தனது லேர்னர்கள் மகத்தான சாதனை புரிந்ததை அறிவிப்பதில் பெருமை கொள்கிறது. தொடங்கப்பட்ட ஒரே வருடத்தில் அன்அகாடமி மையங்கள் மிகச் சிறந்த சாதனையைப் படைத்துள்ளன.
உயர்கல்வி மற்றும் விரிவான வழிகாட்டுதலை, ஆர்வமுள்ள பொறியியல் தொழில் முறை நிபுணர்களுக்கு வழங்குவதில் அன்அகாடமிக்கு உள்ள அர்ப்பணிப்பையே இத்தேர்வு முடிவுகள் பிரதிபலிக்கின்றன. அகில இந்தியத் தர வரிசைப் பட்டியலில் முதல் 100இல் 11 இடங்களைப் பெற்றதன் மூலம் அன்அகாடமி தனது லேர்னர்கள் சவாலான பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு மிகச் சிறந்த முறையில் தயாராவதை உறுதிப்படுத்தி உள்ளது.
5 அன்அகாடமி லேர்னர்கள் 2023 ஜேஇஇ அட்ன்வான்ஸ்ட் தேர்வுகளில் மண்டல டாப்பர்களாகவும் ஒளிர்கின்றனர். அன்அகாடமி லேர்னர் தேஷங்க் பிரதாப் அகில இந்திய தர வரிசைப் பட்டியலில் 22 மற்றும் ஐஐடி தில்லி மண்டலத்தில் 5ஆவது இடத்தையும், துருவ் ஜெயின் அகில இந்திய தர வரிசைப் பட்டியலில் 36 & ஐஐடி கரக்பூர் மண்டலத்தில் 1ஆவது இடத்தையும், ஷிவான்ஷு குமார் அகில இந்திய தர வரிசைப் பட்டியலில் 42 & ஐஐடி கரக்பூர் மண்டலத்தில் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
நிபுன் கோயல் அகில இந்திய தர வரிசைப் பட்டியலில் 40 மற்றும் அபி ஜெயின் அகில இந்திய தர வரிசைப் பட்டியலில் 58 ஆம் இடங்களையும் பெற்றுள்ளனர். விவ்ஸ்வான் சவ்யாசசி அகில இந்திய தர வரிசைப் பட்டிலில் 80 & ஐஐடி குவாஹதி மண்டலத்தில் 1 இடம் மற்றும் வைபவ் சிங்க் அகில இந்திய தர வரிசைப் பட்டியலில் 100 மற்றும் ஐஐடி கான்பூர் மண்டலத்தில் 2 ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
அன்அகாடமி வழிகாட்டுதலின் கீழ் 3000க்கும் அதிகமான லேர்னர்கள் 2023 ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகளில் தகுதி பெற்றுள்ளதன் மூலம் அன்அகாடமியின் விரிவான கற்றல் திட்டங்களின் சிறப்பையும், விளைவையும் உறுதிப்படுத்தி உள்ளனர்.