பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் தனிநபர்கள் தங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவை அடைய அவர்களுக்கு உதவ வேண்டுமெற்ற அதன் நீண்ட கால இலக்குக்கு ஏற்ப 12 புதிய கிளைகளை பிரத்தியேகமாக திறந்துள்ளது. இந்த கிளைகளில் ரோஷ்னி - எனும் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வீட்டுக்கடனை வழங்குகிறது. நாடு முழுவதும் ஊடுருவி 6 மாநிலங்களில் ஹோஸ்கோட், கெங்கேரி, யெலஹங்கா, அத்திபெலே, வகோலி, பொலிஞ்ச், ஓல்ட் பன்வெல், தில்லை நகர், நாகர்கோவில், மதுரா, ஜோத்பூர் மற்றும் அஹமதாபாத் ஆகிய இடங்களில் ரோஷ்னியை மையமாகக் கொண்ட கிளைகளை நிறுவனம் தொடங்குவதாக அறிவித்தது.
ரோஷ்னியுடன், நிறுவனம் குறிப்பாக 1, 2 மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களின் புறநகர்ப் பகுதிகளில் கட்டுபடியாக் கூடிய வகையில் வீட்டுக் கடன்களை வழங்கும். இந்தத் திட்டம், வீட்டுமனை வாங்குதல், சுய கட்டுமானம், வீடு விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல், ப்ளாட் வாங்குதல், ப்ளாட் கட்டுமானம் மற்றும் சொத்து மீதான கடன்கள் உட்பட பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல்வேறு வகையான கடன்களை உள்ளடக்கியது. எனவே, விண்ணப்பதாரர்கள் முதல் முறையாக கடன் வாங்குபவர்களாக இருந்தாலும், முறையான வருமானம் இல்லாமல் சுயதொழில் செய்பவர்களாக இருந்தாலும், ரூ.10,000க்கு குறைவான குடும்ப வருமானம் உள்ள நடுத்தர வருவாய் பிரிவினராக இருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறலாம்.
பிஎன்பி ஹவுசிங் ஃபைனான்ஸ் எம்.டி மற்றும் சி.இ.ஓ., கிரிஷ் கௌஸ்கி கூறுகையில், “தனிநபர்கள் மற்றும் சமூகம் என இருவருக்கும் அணுகக்கூடிய வகையில் வீட்டுக் கடன்களை வழங்கி சமூக - பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம். ரோஷ்னி மூலம், மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு' எனும் முன்முயற்சிக்கு இணங்க, நாடு முழுவதும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய எங்களின் குறைந்த விலை வீட்டு கடன் வசதியை விரிவுபடுத்த உள்ளோம். மூன்று ஆண்டுகளில் சில்லறைத் துறையில் குறைந்த விலை வீட்டுக் கடன்கள் மற்றும் பிரைம் கடன்கள் ஆகியவற்றுக்கு இடையே ஒரு நல்ல கலவை இருக்கும்” என்றார்.