புதுச்சேரியில் அசுஸ்-ன் புதிய கடை திறப்புகம்ப்யூட்டர் மதர்போர்டு உள்ளிட்ட தொழில்நுட்ப உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் தைவான் நாட்டைச் சேர்ந்த அசுஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது இதன் பிரத்யேக ஸ்டோரை பாண்டிச்சேரியில் திறந்துள்ளது. 380 சதுர அடியில் திறக்கப்பட்டுள்ள இந்த பிரத்யேக ஸ்டோர், ஸ்வஸ்திக் வேர்ல்ட், எண்: 3/39, சர்தார் வல்லபாய் படேல் சாலை, பாண்டிச்சேரி - 605001 என்ற முகவரியில் (ஆனந்தா இன் ஹோட்டலுக்கு அருகில்) உள்ளது.

 எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர், மேலும் இந்த பிராண்டின் புதிய தயாரிப்புகளான விவோபுக், சென்புக், சென்புக்-பிளிப், ரிபப்ளிக் ஆப் கேமர்ஸ் லேப்டாப் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. பாண்டிச்சேரியில் இந்த பிராண்டின் முதல் பிரத்யேக ஸ்டோர் இதுவாகும்.

வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் அனுபவத்தையும் சிறந்த சேவையையும் வழங்கும் அதே நேரத்தில் தயாரிப்புகள் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாதிரி விளக்கக்காட்சி பிரிவும் இங்கு உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் புதிய தொழில்நுட்பங்கள், உதிரி பாகங்கள் மற்றும் சமீபத்திய கேமிங் மற்றும் லைப்ஸ்டைல் தயாரிப்புகள் ஆகியவற்றின் முதல் அனுபவம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

இந்தியாவில் தனது விரிவாக்கம் குறித்து அசுஸ் இந்தியா நிறுவனத்தின் பிசி அன்ட் கேமிங் வர்த்தக பிரிவின் தேசிய விற்பனை மேலாளர் ஜிக்னேஷ் பவ்சர் கூறுகையில், இந்தியாவில் எங்களின் சில்லறை வர்த்தகத்தின் விரிவாக்கத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் தயாரிப்புகளுக்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், தற்போது நாங்கள் பாண்டிச்சேரியில் எங்களின் புதிய ஸ்டோரை திறந்துள்ளோம். இங்கு எங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் இந்த பிரத்யேக ஸ்டோர், பல்வேறு பகுதிகளில் துவங்குவதற்கான முதல் படியாக இருக்கும். எங்களின் இந்த சில்லறை விற்பனை மூலம் பயனர்களுடன் நேரடி தொடர்பு கொள்வதோடு, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வோம் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form