அனைவருக்கும் பரிச்சயமான பிரபல குழந்தை பராமரிப்பு பிராண்டான ஹிமாலயா பேபிகேர், தந்தையர்களின் உன்னதமான அன்பினைக் கொண்டாடுவது மற்றும் அதன் அவசியத்தை பேணி ஊக்குவிக்கும் நோக்கத்தில் மனதைத்தொடும் ஒரு பிரச்சார முன்னெடுப்பினைத் துவங்கியுள்ளது. ஒரு அப்பாவிற்கும் அவரது குழந்தைக்கும் இடையிலான தகர்க்க முடியாத பந்தத்தை உணர்த்தும் “ஆட்டோகிராஃப்” என்கிற ஒரு சிந்திக்க வைக்கும் காணொளியை ஹிமாலயா பேபிகேர் வெளியிட்டுள்ளது.
அப்பாக்களின் ஆழமான உணர்வுகளை படமாக்கிய இந்த படைப்பானது, உண்மையில் ஒரு அப்பாவிற்கு மட்டுமே தெரியக்கூடிய, வெளியில் சொல்லாத அவரது அன்பு, தியாகங்கள், மற்றும் போராட்டங்கள் ஆகியவற்றை அழகாக கூறுகிறது. ஒரு நடுத்தர குடும்பத்தின் அப்பா வேலை முடிந்து, உழைத்து சோர்வடைந்த நிலையில் வீட்டிற்கு வருகிறார், களைப்பின் அசதியில் அவரது அப்பா அங்கிருப்பதை கவனிக்கத் தவறுகிறார். இருப்பினும், சிறுமியான அவரது மகள் தனது அப்பாவிற்கு ஆச்சரியமூட்டும் விதமாக பின்னாலிருந்து அவரது கண்களை மூடிக்கொண்டு, என்னுடைய “ஹீரோ” யாரென்று கேட்கிறாள்.
யாராவது ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரமோ அல்லது நடிகராகவோ தான் இருக்க வேண்டும் என தந்தை நினைத்து பதிலை யோசிக்க... நீங்கள் தான் என்னுடைய ஹீரோ என்று சொல்லி அவரது ஆட்டோகிராஃபை கேட்கிறாள். அவளது இந்த கனிவான செயல் அந்த அப்பாவிற்கு தனது தந்தையுடனான உறவு பற்றி சிந்திக்க வைக்கிறது. அவர் தனது தந்தையின் அறைக்குச் சென்று தந்தையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து, அவரது ஆட்டோகிராஃபை கேட்கிறார். மகனின் இந்த எதிர்பாராத அன்பின் வெளிப்பாட்டால் நெகிழ்ந்த அந்த வயதான அப்பா தனது ஆட்டோகிராஃபை கொடுத்து, முதல் முறை தான் இப்படி ஆட்டோகிராஃப் தருவதாக சொல்கிறார்.
அதைக் கேட்டு நெகிழ்ந்த இளம் தந்தை, விலைமதிப்பற்ற உறவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொள்கிறார். மூன்று தலைமுறையை சேர்ந்த மூவரும் ஒன்றாக விளையாடுவதாக நிறைவடையும் இந்த காணொளி, அனைத்து தந்தையர்களுக்கும் ஹிமாலயா பேபிகேரின் தந்தையர் தின வாழ்த்துக்களைக் கூறி முடிகிறது.
இதுபற்றி ஹிமாலயா வெல்னஸ் கம்பெனியின், பிஸ்னஸ் ஹெட் - பேபிகேர், என்.வி.சக்ரவர்த்தி கூறிகையில், “உலகெங்கிலும் உள்ள தந்தையர்களின் அர்பணிப்பு மற்றும் தியாகங்களை கௌரவிப்பதற்கும், கொண்டாடுவதற்கும் இந்த பிரச்சார முன்னெடுப்பினை ஒரு வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். நாம் வளரும் போது பல்வேறு காரணங்களுக்காக நமது அப்பாக்களை விட்டு தூரமாக விலகி வந்துவிடுகிறோம். எனவே எங்களது முன்னெடுப்பான இந்த “ஆட்டோகிராஃப்” மூலம் ஒரு தந்தைக்கும் அவரது குழந்தைகளுக்கும் இடையேயான அன்பினை மீண்டும் துளிர்விடச் செய்ய நாங்கள் முடிவு செய்தோம், மற்றும் அதன் மூலம் அனைவரும் அவரவர் தந்தையிடம் அன்பினையும், நன்றியையும் வெளிப்படுத்துவதை ஊக்குவிக்க எண்ணினோம். அப்படி செய்வது அவர்களுக்கு அதீதமான மகிழ்ச்சியை அளித்து, அவர்களின் உறவிற்கு மேலும் வலுசேர்க்கும். மனதைத் தொடும் இந்த கதை மக்களின் இதயங்களை அன்பால் வருடுமென்றும், அப்பா என்கிற அழகிய பந்தத்தை நாம் பேணி பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறுமென்றும் நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.