இந்தியாவில் க்ராஷ் பரிசோதனை மற்றும் பாதுகாப்புத் தர மதிப்பீட்டுச் சான்றிதழ் பெற்ற மகிழுந்துகளுக்கு முக்கியத்துவம்

 


தனிப்பயனுக்காக மகிழுந்தைத் தேர்தெடுப்பதில், எதிர்கால விருப்பங்களை அளவிட வாடிக்கையாளரிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. என்ஐக்யூ பேசஸ் மூலம் ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்த ஆய்வை நடத்தியது.   ஆய்வில் பங்கேற்றோரில் 67 சதவிகிதம் பேர் ஏற்கனவே ரூ 5 லட்சத்துக்கும் அதிக மதிப்புள்ள மகிழுந்தை வைத்திருக்கும் உரிமையாளர்கள். 33 சதவிகிதத்தினர் எந்த மகிழுந்தும் இல்லை எனினும் அடுத்த ஓராண்டுக்குள் ரூ 5 லட்சம் மதிப்பில் மகிழுந்து வாங்கும் முடிவில் உள்ளவர்கள். எஸ்இசி ஏ மற்றும் பி பிரிவிலுள்ள 18-54 வயது வரையில் உள்ளோர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

வாடிக்கையாளர் மகிழுந்து வாங்கும் முடிவில் 22.3 சதவிகித மதிப்பெண்ணுடன் க்ராஷ் மதிப்பீடு  விருப்பம் முதலிடத்திலும், 21.6 சதவிகித  மதிப்பெண்ணுடன் ஏர்பேக் விருப்பம் இரண்டாம் இடத்திலும், 15.0 சதவிகித மதிப்பெண்ணுடன் எரிபொருள் சிக்கன விருப்பம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மகிழுந்துகள் க்ராஷ் மதிப்பீட்டைப் பொருத்தவரை, 5 நட்சத்திர தர மதிப்பீட்டுக்கு அதிகபட்சம் 22.2 சதவிகித வாடிக்கையாளர் விருப்ப மதிப்பெண்ணும், 4 நட்சத்திர தர மதிப்பீட்டுக்கு 21.3 சதவிகிதம்  மற்றும் பூஜ்யம் மதிப்பீட்டுக்கு 6.8 சதவிகிதமும் கிடைத்துள்ளன. க்ராஷ் பரிசோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்புத் தர மதிப்பீடுகள் 2 தொகுப்புகள் இருப்பது குறித்த விழிப்புணர்வு அதிகமாக 76 சதவிகிதம் காணப்படுகிறது. ஆனால், இவ்விரு தொகுப்புகளில் குழந்தை / பின் இருக்கைப் பயணிகளுக்கான பாதுகாப்புத் தர மதிப்பீடுகளில் ஒன்றென்பது குறித்த விழிப்புணர்வு இந்தியாவிலுள்ள அனைத்து வாடிக்கையாளர்களில் 30 சதவிகிதத்தினரிடம் மட்டுமே உள்ளது.

ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் கூறுகையில் ‘ஸ்கோடாவைப் பொருத்தவரை பாதுகாப்பு என்பது எங்கள் டிஎன்ஏ-வின் ஓர் அங்கம் என்பதுடன், பாதுகாப்பான மகிழுந்துகளைத் தயாரிக்க வேண்டும் என்ற கொள்கையும் ஆகும்.  கிராஷ் பரிசோதனைகள் மற்றும் பாதுகாப்பில் எங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உண்டு. 2008 முதல் ஒவ்வொரு ஸ்கோடா மகிழுந்தும் உலகளாவிய க்ராஷ் பரிசோதனைக்கு உட்படுகிறது.  இந்தியாவில் 5 நட்சத்திர பாதுகாப்புத் தர மதிப்பீடு சான்றளிக்கப்படுகிறது.  அதிகபட்ச பாதுகாப்புத் தர மதிப்பீட்டுடன் கூடிய மாடல்களைக் கொண்டிருக்கும் முன்னணி 3 பிராண்டகளுள் ஸ்கோடா  உணரப்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது‘ என்றார்.

என்ஐக்யூ பேசஸ், பேச்சஸ் ஸ்பெஷாலிடி விற்பனை, பிராந்திய இயக்குனர் (ஏபிஎம்இஏ) அம்ருதா ஸ்ரீவாத்சவா பேசுகையில் ‘என்ஐக்யூ பேசஸ் தீர்வு - எஃப்பிஓ (ஃபீசர் ப்ரைஸ் ஆப்டிமைசர்) தனித்துவமான தேர்வு முறை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மகிழுந்தை வாங்கும் போது, வாடிக்கையாளர்கள் க்ராஷ் மதிப்பீடு பாதுகாப்பு அம்சத்துக்கு ஏனைய பரிசோதிக்கப்பட்ட அம்சங்களை விடவும் முன்னுரிமை தருவதாகத் தெரிவிக்கிறது‘ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form