சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அல்கான் நிறுவனம்



கண் பராமரிப்பு சேவையில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் அல்கான் நிறுவனம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் வங்கியுடனான தனது கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது.  இதன் மூலம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத பகுதிகளில் மறுசுழற்சி சுற்றுச்சூழலை உருவாக்கி பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வழங்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள உறுப்பினர்களுக்கு உதவிட உள்ளது. 

சந்தையில் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு டன் பிளாஸ்டிக்கையும் ஈடு செய்யும் வகையில் கடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக்கை பிளாஸ்டிக் வங்கியுடன் இணைந்து இந்நிறுவனம் சேகரிக்கிறது. இந்த பணியில் கடலோர சமூகத்தினர் ஈடுபடும்போது அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டில், குறிப்பிட்ட கண் அறுவை சிகிச்சை மற்றும் பார்வை பராமரிப்பு தயாரிப்புகளுக்காக அல்கான் பயன்படுத்திய பிளாஸ்டிக்கை ஈடுசெய்யும் வகையில் பிளாஸ்டிக் வங்கி 6,49,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுச்சூழலில் இருந்து அகற்றி உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் 9,90,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அல்கான் திட்டமிட்டுள்ளது. இது இந்த ஆண்டு 5 கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்கள் கடலுக்கு செல்வதை தடுப்பதற்கு சமம் ஆகும்.

பிளாஸ்டிக் வங்கியுடனான கூட்டாண்மை மூலம் அல்கான் நடப்பு ஆண்டில் உலகளவில் 330க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு உதவ உள்ளது. இந்த பிளாஸ்டிக் சேகரிப்பில் ஈடுபடும் உறுப்பினர்கள் தாங்கள் சேகரிக்கும் பிளாஸ்டிக்கிற்கு ஏற்ப இன்சூரன்ஸ், மளிகை பொருட்களுக்கான வவுச்சர்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெறலாம். பிளாஸ்டிக் வங்கி கூட்டுடன் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வரும் அல்கான் நிறுவனம், பசுமை கண்டுபிடிப்புகள் அறுவை சிகிச்சை குழு என்னும் திட்டத்தை உருவாக்கி, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவுடன் இணைந்து 90 சதவீதம் வரை பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் பிரிவுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து அல்கான் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகப் பிரிவு தலைவர் சார்லஸ் ஹெர்கெட் கூறுகையில், மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள் என்பது இன்றியமையாதவை என்றபோதிலும், பிளாஸ்டிக் வங்கியுடன் இணைந்து இதுபோன்ற திட்டங்களை ஆதரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தைக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். பிளாஸ்டிக் வங்கியுடன் தொடர்ந்து நாங்கள் செயல்படுவதன் மூலம் எங்களது அறுவை சிகிச்சை மற்றும் கண் பாதுகாப்பு பிரிவில் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை ஈடுசெய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதேபோல் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் பொருட்கள் போன்ற பிற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் நடவடிக்கைகைள எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form