மதுரை டவுண் டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

சர்வதேச ரோட்டரி சங்கங்களின் மதுரை டவுண்  டவுன் ரோட்டரி சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா ஜூன் 26 அன்று  இனிதே நடைபெற்றது.

நிகழ்வினை பரிந்துரைக்கப்பட்ட ஆளுநர் (2025-26) கார்த்திக் சிறப்பு விருந்தினராக இருந்து கௌரவித்தார்.  

புதிய சங்க நிர்வாகிகளாக தலைவர் ஜெயக்கிரன் ஜெய்ன், செயலர் திருமலையப்பன், பொருளாளர் சௌந்தர்ராஜன்  ஆகியோர் பணியேற்று கொண்டனர்.

நிகழ்வில் ரோட்டரி சங்கத்தின் மதுரை உதவி ஆளுநர் கௌசல்யா,  மண்டல ஒருங்கிணைப்பாளர் அசோக், முன்னாள்  ஆளுநர் ஆர்.வி.என். கண்ணன், உடனடி முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன், முன்னாள் ஆளுநர்கள், முன்னாள் உதவி ஆளுநர்கள், முன்னாள் ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் செயலர்கள், பல்வேறு சங்கங்களில் இருந்து தலைவர்கள், செயலாளர் மற்றும் பல்வேறு ரோட்டரி சங்கங்களின்  உறுப்பினர்கள் பங்கேற்றனர். திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி சங்கத்தில் இருந்து விதைப்  பந்துகள் மதுரை டவுண்  டவுன் ரோட்டரி சங்கத்திற்கு கொடுக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form