குறுகிய காலத்திலிருந்து நீண்ட கால வரையிலான நிதி இலக்குகளை அடைய, சொத்து வர்க்கம் முழுவதும் பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கும் போது பரஸ்பர நிதி விருப்பத்தை ஆராயலாம். நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் இலக்குகளை அடைவதில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யக்கூடிய ஒரு பரஸ்பர நிதி தயாரிப்பு வகை இங்கே உள்ளது. ஃப்ளெக்ஸி-கேப் ஃபண்டுகள், மொத்த சொத்துக்களில் குறைந்தது 65 சதவிகிதம் முதலீடு செய்யும் திறந்தநிலை ஈக்விட்டி ஃபண்டுகள்,லார்ஜ்-காப், மிட் -காப் அல்லது ஸ்மால்-காப் ஃபண்ட் போன்ற பல்வேறு சந்தை மூலதனங்களில் உள்ள நிறுவனங்கள் முழுவதிலும் ஈக்விட்டி சொத்துக்களில் முதலீடு செய்யப்படுகின்றன.
யுடிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் என்பது இந்த வகையின் பழமையான நிதிகளில் ஒன்றாகும். இது நிலையான செயல்திறனுக்கான நீண்ட கால சாதனைப் பதிவைக் கொண்டுள்ளது.யுடிஐ மியூச்சுவல் ஃபண்டின் இந்த வழங்களானது, முதலீட்டாளர்களுக்கு பொருளாதார மதிப்பை உருவாக்கும் திறன் கொண்ட தரமான வணிகங்களில் முதலீடு செய்ய முயற்சிக்கும் நிதியைத் தேடும் எந்தவொரு நீண்ட கால முதலீட்டாளருக்கும் ஏற்றதாயிருக்கிறது.
யுடிஐ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டின் முதலீட்டுத் தத்துவம் தரம், வளர்ச்சி மற்றும் மதிப்பீடு ஆகிய மூன்று தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. "தரம்" என்பது ஒரு நீண்ட காலத்திற்கு மூலதனத்தில் அதிக வருமானம்அல்லது ஈக்விட்டி மீதான வருமானம் ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வணிகத்தின் திறனைக் குறிக்கிறது. உண்மையிலேயே உயர்தர வணிகங்கள் என்பது அந்தந்த தொழில்கள் அல்லது துறைகளுக்கு கடினமான காலங்களில் கூட உயர் மூலதனத்தில் அதிக வருமானங்கள் மற்றும் ஈக்விட்டி மீதான வருமானங்களை உருவாக்க முடியும், எனவே எல்லா நேரங்களிலும் அவற்றின் மூலதனச் செலவுக்கு மேல் செயல்படும்.
"வளர்ச்சி" என்பது வணிகத்திற்கான நீண்ட கால நடைமுறைக்கேற்ற வளர்ச்சியைக் குறிக்கிறது. சுழற்சி மற்றும் நிலையற்ற வளர்ச்சியைக் காட்டிலும் நிலையான மற்றும் கணிக்கக்கூடிய வளர்ச்சிப் பாதையைக் கொண்ட வணிகங்களுக்கு இந்த நிதி முக்கியத்துவம் அளிக்கிறது. உயர்தர வணிகங்கள் பொருளாதார மதிப்பை உருவாக்கும் அதே வேளையில், உயர் வளர்ச்சி வணிகம் இந்த பொருளாதார மதிப்பை கூட்டும். இந்த காரணத்திற்காகவே, பங்குத் தேர்வுக்கான நிதியின் விருப்பமான வேட்டைக் களம், தரம் மற்றும் வளர்ச்சியின் ஒருங்கிணைப்பு ஆகும்.
ஒரு சிறந்த வணிகத்திற்கான நுழைவு புள்ளியாக, மதிப்பீடுகள், ஒரு முக்கியமான அளவீடு ஆக இருக்கிறது, எனவே ஒரு பங்கை வாங்கும் முன் ஒருவர் இதை நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.. வருமானத்திற்கான விலை ப்ரைஸ் டு ஏர்னிங்ஸ் விகிதம் என்பது ஒரு வணிகத்தின் மதிப்பீடுகளைப் புரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல தொடக்கப் புள்ளியாக இருந்தாலும், இது பரவலாக தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட மதிப்பீட்டு நுட்பமாகும். பி/இ களை மட்டும் பார்த்து ஒரு தீர்ப்பை அடைவதற்கு முன், ஒருவர் ஒவ்வொரு வணிகத்தின் சிறப்பியல்புகளையும் கவனமாக ஆராய்ந்து ஒவ்வொன்றின் நியாயமான மதிப்பீட்டு வரம்பைத் தீர்மானிக்கவேண்டும். இந்தத் திட்டத்தின் முதல் பத்து முதலீட்டுப் பங்கில் பல முன்னனி நிறுவனங்கள் அடங்கும் என யுடிஐ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.