இருசக்கர வாகனங்களை மின்மயமாக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ்


உலக அளவில் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, சஸ்டெய்னபிள் ஃப்யூச்சர் மொபிலிட்டி சொல்யூஷன்களை நோக்கிய தனது சமூக நலன் மீதான அர்ப்பணிப்புமிக்க பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது இருசக்கர வாகன எலெக்ட்ரிஃபிகேஷன் ஆக்கும் முயற்சியை ஊக்குவிக்கும் இந்திய அரசின் தொலைநோக்கு கொள்கைக்கு ஏற்ப அமைந்துள்ளது.

 போக்குவரத்தை மின்மயமாக்குவதை விரைவுபடுத்தும் அரசின் முயற்சியை ஆதரிக்கும் விதமாகவும், நாட்டின் ஒட்டுமொத்த வாகன மின்மயமாக்கல் சூழலை மேம்படுத்துவதாகவும்  டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இந்த முயற்சி அமைந்துள்ளது. டிவிஎஸ் ஐ க்யூப்-ஐ மே , 20 2023க்கு முன் புக்கிங் செய்தவர்கள் ரூ.1,34,219க்கும், மே 21, 2023க்கு மேல் புக்கிங் செய்தவர்கள் ரூ.1,41,219க்கு வாங்கலாம். டிவிஎஸ் ஐ க்யூப் எஸ்-ஐ மே , 20 2023க்கு முன் புக்கிங் செய்தவர்கள் ரூ. 1,46,884க்கும், மே 21, 2023க்கு மேல் புக்கிங் செய்தவர்கள் ரூ.1,56,324க்கு வாங்கலாம்.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் மின் வாகன பிரிவின் மூத்த துணைத் தலைவர், மனு சக்சேனா கூறுகையில், "டிவிஎஸ் மேற்கொண்டுவரும் இருசக்கர வாகன மின்மயமாக்கல் முயற்சிகளின் பலனாக, கடந்த நிதியாண்டில் ’டிவிஎஸ் ஐக்யூப்’  ஸ்கூட்டர்கள் விற்பனையில் 1 லட்சம் வாகனங்கள் விற்பனை என்ற மாபெரும் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.  வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட டிவிஎஸ் மோட்டாரின் அர்ப்பணிப்புக்கு ஏற்ப, மே 20, 2023 வரை முன்பதிவு செய்த டிவிஎஸ் ஐக்யூப்  வாடிக்கையாளர்களுக்கு டிவிஎஸ் நிறுவனம் உண்மையான பலன் அளிக்கும் திட்டத்தை வழங்குகிறது. ஃபேம் 2 மானிய திருத்தத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு செலவுச் சுமையை குறைக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும், இந்த பலன் கிடைக்கும். கூடுதலாக, ஜூன் 2023 முதல் வாகனத்தை முன்பதிவு செய்யும் புதிய வாடிக்கையாளர்களும் ஃபேம் 2 மானிய திருத்தத்தின் வாயிலாக செலவின் முழுச் சுமையையும் ஏற்காமல் புதிய விலைகளைப் பெறலாம். ஃபேம் 2 திருத்தத்திற்கு பின்னர், ஜூன் 1, 2023 முதல் டிவிஎஸ் ஐக்யூப்  வாகனத்தின் விலை ரூ.17,000ன் முதல் ரூ.22,000 வரை அதன் ரகங்களைப் பொறுத்து உயர்ந்துள்ளது. அதே வேளையில் மே 20, 2023-க்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கும் கூடுதலான உண்மையான பலனை கிடைக்கச் செய்ய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இத்திட்டத்தை மேலும் நீட்டித்துள்ளது" என்றார்.

இருசக்கர வாகன மின்மயமாக்கல் நோக்கிய உற்சாகமான பயணத்தில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் பல்வேறு ரகங்களில் தங்களுக்குப் பிடித்ததை தேர்வு செய்யும் வாய்ப்புகள், இணைப்பு தொழில்நுட்பம் சார்ந்த வசதிகள், சார்ஜர்கள், வண்ணங்கள்போன்றவற்றில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தவற்றை தேர்வு செய்யும் சக்தியை வழங்கும். சமீபத்திய விதிமுறைகளை  பின்பற்றுவதில் அக்கறையுடன் இருப்பதன் மூலம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, குறித்த நேரத்தில் வாகன விநியோகத்திற்கான வாக்குறுதியை நிறைவேற்றி வாடிக்கையாளர்களுக்கு ஒரு  முழுமையான மன அமைதியைஅளிப்பது மற்றும் டிவிஎஸ் ஐக்யூப்  ஸ்கூட்டரை இயக்குவது எளிது என்ற  ஈர்ப்பை வாடிக்கையாளர்களிடையே உணரவைப்பது என டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் வாடிக்கையாளர்கள் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form