சமீபகாலமாக முதலீட்டு உலகில் மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதன் சாராம்சம் என்னவென்றால், முதலீட்டைக் கருத்தில் கொள்ளும்போது ஒரு நிறுவனத்தின் அளவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் என்பவை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிட்-கேப் நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தபட்சம் 65 சதவிகிதம் சொத்துக்களை முதலீடு செய்வதாகும். அவை முதலீட்டு அபாயம் மற்றும் வருவாயின் சரியான கலவையை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் உள்ளன - ஸ்மால்-கேப் நிறுவனங்களின் ஃபண்டுகளை விட குறைவான முதலீட்டு அபாயம் உள்ளவை, ஆனால் லார்ஜ்-கேப் நிறுவனங்களின் ஃபண்டுகளை விட அதிக வருமானத்தை அளிக்கக் கூடியவை.
மிட்-கேப் மியூச்சுவல் ஃபண்டுகளின் குறிப்பிடத்தக்க ஆதாயங்களில் ஒன்று பல்வேறு தொழில் வகைகள் மற்றும் துறைகளில் அவற்றின் பல்வகைப்படுத்தப்பட்ட முதலீடுகளை மேற்கொள்வதாகும். திறந்தநிலை நிதிகளான இவற்றை அதன் அதிக லிக்விடிட்டியின் காரணமாக, அவற்றின் யூனிட்களை எந்தவித குறிப்பிட்ட லாக்-இன் காலக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், சுதந்திரமாக வாங்கலாம் மற்றும் விற்கலாம். நம்பகமான வளர்ச்சி வாய்ப்புகளை இந்த மிட்-கேப் நிறுவனங்கள் கொண்டுள்ளன. ஒப்பீட்டளவில் இவை குறைவாகவே பரிச்சயமாக இருந்தாலும், கணிசமான வருமானத்தை ஈட்டும் திறனைக் கொண்டுள்ளன.
ஆனால் வளர்ச்சி வாய்ப்புகளுடன் சேர்ந்து வரும் ஒரு முதலீட்டு ஆபத்தும் இதில் உள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும். செல்வ வளத்தை உருவாக்குவதைப் பொறுத்தவரை, மிட்-கேப் ஃபண்டுகளில் நீண்ட கால முதலீடு அதிக பலனளிக்கும் திறனைக் கொண்டுள்ளன. மிட்-கேப் பங்குகள் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப அதனை உடனடியாக பிரதிபலிப்பவை, மற்றும் இது குறுகிய கால ஏற்ற இறக்கத்திற்கு வழிவகுக்கலாம்.
அலிஸ் ப்ளூ நிறுவனத்தில் சேமிப்பு மற்றும் முதலீட்டு கலாச்சாரத்தை வளர்க்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எந்தச் செலவும் இல்லாமல் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை நாங்கள் அனைவருக்கும் வழங்குகிறோம், மற்றும் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தையும் நாங்கள் வழங்குகிறோம். இந்த சேவை, முதலீட்டை அணுகக்கூடிய ஒன்றாகவும், அனைவருக்கும் கட்டுப்படியாகக் கூடிய ஒன்றாகவும் மாற்ற வேண்டும் என்கிற எங்களது இலட்சியத்தின் ஒரு பகுதியாகும் என அலிஸ் ப்ளூ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.