உலகளவில் ஆஸ்துமாவால் 262 மில்லியன் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்த ஆண்டு உலக ஆஸ்துமா நாளுக்கான மைய நோக்கம் ‘அனைவருக்கும் ஆஸ்துமா பாதுகாப்பு’ ஆகும். தரமான மருந்து மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆதாரங்களுக்கான மேம்பட்ட அணுக்கம் மூலம் நோயைச் சிறப்பாக மேலாண்மை செய்வதே நோக்கமாகும். இந்த ஆண்டுக்கான மைய நோக்கம் இந்தியாவில் தற்போது நிலவும் நோய்ச் சூழலுடன் மிக வலுவாக ஒத்துப் போகிறது. நாடு முழுவதும் சுமார் 30 மில்லியன் (3 கோடி) மக்கள் நோய் காரணமாக பாதிக்கப்படுவர் எனக் கணித்துள்ளனர். இதில் பெரும்பான்மையோர் உரிய பரிசோதனை மேற்கொள்ளாதோர் அல்லது தேவையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாதோர் ஆவர். ஒட்டு மொத்த உலகளாவிய நோயாளிகளுடன் ஒப்பிடுகையில் நாட்டின் ஆஸ்த்மா பாதிப்பு 13% மட்டுமே என்றாலும், உலகளாவிய ஆஸ்த்மா இறப்புகளில் நாட்டின் இறப்புகள் 42% ஆகும். இதற்கு முக்கியக் காரணம் நோய் பற்றிய கணிசமான விழிப்புணர் இல்லாமையும், இன்ஹேலர் சிகிச்சை குறித்த தவறான கருத்துமே ஆகும்.
ஆஸ்த்மா தொற்றாத நோயாகும். எல்லா வயதினரையும் பாதிக்கும் நோய் என்றாலும், குழந்தைகளிடையே காணப்படும் பொதுவான நாள்பட்ட நோயாகும். இதன் காரணமாக சுவாஸக் குழாய்கள் குறுகும், வீங்கும், அதிகப்படியான சளியை உற்பத்தி செய்யும். மூச்சு விடுவதைச் சிரமப்படுத்தும். ஆஸ்த்மா சிகிச்சையில் மூச்சு உள்ளிழுக்கும் சிகிச்சை முக்கிய அம்சமாகும். எதிர்பாராவிதமாக, இந்தச் சிகிச்சை பற்றிய தவறான கருத்துக்களால், ஆஸ்த்மா நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைகளைப் பின்பற்றத் தவறுகின்றனர் அல்லது மறுக்கின்றனர்.
ஆஸ்த்மா குறித்து நாட்டில் நிலவும் பொதுவான கருத்து, நோய் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை ஏற்பு குறித்து அவசியத்தை வலியுறுத்தி டாக்டர் கே.பாரதி பாபு, நுரையீரல் நிபுணர் ஆலோசகர், மதுரை பேசுகையில் ‘, சமூக இழிவு, தவறான எண்ணங்கள், கட்டுக்கதைகள் ஆகியவற்றால் இந்திய ஆஸ்த்மா சூழப்பட்டுள்ளதால், இங்குள்ள ஆஸ்த்மா நோயாளிகளுள் 23% மட்டுமே தங்களுக்கு ஆஸ்த்மா இருப்பதை வெளிப்படையாகப் பெயர் சொல்லித் தெரிவிக்கின்றனர். தங்களுக்கு ஆஸ்த்மா இருப்பதைத் தெரிவிக்க மறுக்கக் காரணம் 70%க்கும் அதிகமான தீவிர ஆஸ்த்மா நோயாளிகள் இன்னும் மருத்துவ ரீதியாக முறையாகப் பரிசோதிக்கப்படவில்லை என்பதுதான். உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக் எடுத்துக் கொள்ள நோயாளிகளுக்கு இப்பிரச்சினைகளே காரணமாக உள்ளன. தங்கள் நோய் மீதான கட்டுப்பாட்டை முன் கூட்டியே எடுக்க இவையே பெரும் தடையாகவும் இருக்கின்றன. இவை அனைத்துமே நீண்ட கால நோய் மேலாண்மையில் முக்கியம் என்பதால், ஆஸ்த்மா போன்ற நாள்பட்ட சுவாச நோய்களுக்கு ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோயாளியின் உடல் நிலையை மேம்படுத்தி இத்தகைய பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்பதுஅவசியமாகும்’ என்றார்.
இது குறித்து டாக்டர் டாக்டர் பிரேம் அனந்த் பி., முதுநிலை நுரையீரல் ஆலோசகர், மதுரை கூறுகையில் ‘மூச்சை உள்ளிழுக்கும் சிகிச்சை ஆஸ்த்மா மேலாண்மையில் முக்கியம் என்றாலும், இந்தியாவிலுள்ள இன்ஹேலர்களிடம் நிலவும் சமூக இழிவு இந்நோய்க்ச் சிகிச்சைக்குத் தடையாக உள்ளது. குழந்தைகளிடம் இது பரவலாக இருக்கக் காரணம், அவர்களுக்கு ஆஸ்த்மா இருப்பதைப் பெற்றோர்களே மூடி மறைப்பதால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுப்பதைத் தவிரக்கின்றனர் அல்லது தாமதப்படுத்துகின்றனர். நோய் அறிகுறிகள் முற்றுவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும். மருத்தவர்கள் பரிசோதித்து நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் மூச்சு உள்ளிழுக்கும் சிகிச்சைப் பயன்பாடு 9%க்கும் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இச்சவால்களுடன், சுகாதாரப் பாதுகாப்பு அணுக்கமின்மை, சிகிச்சைச் செலவுகள், நிதி ஆதாரங்கள் பற்றாக்குறை, நோய் அறிகுறிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள், தொழில்நுட்பம், வழிகாட்டுதல் இல்லாமை ஆகியவை பிரச்சினையை இன்னும் அதிகமாக்குகின்றன. எனவே, இச்சவால்களைச் சமாளிக்க, இந்தியாவில் ஆஸ்த்மா மற்றும் அதன் பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சைகள் ஆகிய இரண்டுக்குமான கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை’ என்றார்.
நோயாளிகளுக்குப் போதிய ஆற்றலையும், தொடர் ஆதரவையும் அளிப்பதன் வாயிலாக, ஆஸ்த்மா தொடர்பான அவர்களது அணுகுமுறை மற்றும் நடத்தையில் ஆக்கப்பூர்வ மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பொது மற்றும் சிப்லாவின் #பெரோக்ஜிந்தகி பிரச்சாரம் உள்ளிட்ட நோயாளி விழிப்புணர்வு முனைவுகள், சமூக உரையாடல்கள், ஆகியவை மூலம் மக்களிடையே தவறான எண்ணங்கள் பரவுவதைத் தடுக்க முடியும்.
இருப்பினும், சூழலமைவு மூலம் விழிப்புணர்வு முனைவுகள் கணிசமாக எட்டப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். இது சிப்லா ப்ரீத்ஃப்ரீ திட்டம் உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்புகளுக்கான மேம்பட்ட அணுக்கத்துக்கு வழிவகுக்கும். பரிசோதனை, கலந்தாய்வு, சிகிச்சையைப் பின்பற்றும் திட்டங்களை உள்ளடக்கி நுரையீரல் பாதுகாப்பில் மேம்பட்ட சிகிச்சையை நோயாளிக்கு வழங்குவது முக்கியமாகும்.