டெம்ப்ட் இந்தியாவுடன் இணையும் பிசிஎஸ்


இந்திய அலுவலக ஆட்டோமெஷன் துறையில் மிக வேகமாக வளரும் நிறுவனங்களுள் ஒன்றான பிசிஎஸ் தனது பொருள்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் டெம்ப்ட் இந்தியாவுடன் கூட்டாண்மை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டெம்ப்ட் பொருள்கள் தமிழகம் மற்றும் கேரள சில்லரை அவுட்லெட்களில் இனி பிரத்யேகமாகக் கிடைக்கும்.     திருப்பூர், ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களை உள்ளடக்கிய தமிழகம் மற்றும் கேரளத்தில் இரு பிராந்திய அலுவலகங்கள் மூலம் டெம்ப்ட் இந்தியா அதி நவீன மற்றும் சிறந்த தொழில்நுட்பப் பொருள்களுக்கான அணுக்கம் நுகர்வோர்க்கு எளிதாகும்.  


இக்கூட்டாண்மை ஒப்பந்தம் குறித்து டெம்ப்ட் இந்தியா இணை நிறுவனர் கௌரவ் கேட்டர்பால் கூறுகையில் ‘பிரிமியம் லைஃப்ஸ்டைல் பிராண்ட் என்ற முறையில், ஆடம்பரமான பொருள்களை மனச்சாட்சிக்கு உகந்த விலையில் உலகத் தரமுள்ள பொருள்களை இந்தியா முழுவதுமுள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். பிசிஎஸ் நிறுவனத்துடனான எங்கள் கூட்டாண்மை மூலம் தென் இந்தியாவின் முக்கிய நகரங்களிலுள்ள பெருமை மிகு வாடிக்கையாளர்களைச் சென்றடைவோம் என உறுதியாக நம்புகிறோம்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form