நுவோகோ ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஆலை கோவையில் திறப்பு


இந்தியாவில் சிமெண்ட் உற்பத்தியில் 5வது இடத்திலும், கிழக்கு இந்தியாவில் முன்னணி நிறுவனமாகவும் திகழும் நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது புதிய ரெடி–மிக்ஸ் கான்கிரீட் ஆலையை கோவையில் திறப்பதாக அறிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்தில் 60 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட ரெடி–மிக்ஸ் கான்கிரீட் தயாரிக்கும் இந்த ஆலையானது, இப்பகுதியில் உள்ள கட்டுமானத் திட்டங்களுக்கான சிமெண்ட் தேவையை பூர்த்தி செய்வதோடு, உயர்தர கான்கிரீட்டின் நம்பகமான ஆதாரத்தை வழங்குகிறது. அதேநேரம் கட்டுமான செயல்திறனை வலுப்படுத்துவதோடு, செலவுகளைக் குறைக்கிறது மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

தென்னிந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாக இந்நிறுவனம் சென்னைக்கு அடுத்து 2வதாக கோவையில் இந்த ரெடி–மிக்ஸ் கான்கிரீட் ஆலையை திறந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட கான்கிரீட்டின் தரம் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் போதுமான வசதிகளுடன் இந்த ஆலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது விரைவான சிமெண்ட் வினியோகத்திற்கும் உறுதி அளிக்கிறது. இதன் மூலம் தென்னிந்தியாவின் சிமெண்ட் தேவையை பூர்த்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய ஆலை குறித்து நுவோகோ நிறுவனத்தின் ரெடி-மிக்ஸ் கான்கிரீட் மற்றும் நவீன கட்டிடப் பொருட்கள் வணிகப் பிரிவுத் தலைவர் பிரசாந்த் ஜா கூறுகையில், எங்களின் ரெடி–மிக்ஸ் கான்கிரீட்டைப் பொறுத்தவரை, கான்க்ரீட்டோ (செயல்திறன் கான்கிரீட்), ஆர்டிஸ்ட் (அலங்கார கான்கிரீட்), இன்ஸ்டாமிக்ஸ் (உடனடியாக பயன்படுத்தத் தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட கான்கிரீட்), எக்ஸ்–கான் (எம்20 முதல் எம்60 வரை), மற்றும் ஈகோடூர் (சிறப்பு பச்சை நிற கான்கிரீட்) ஆகியவை உள்ளன. இந்த வகைகள் அனைத்தும் எங்கள் வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிலையான கட்டுமான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் ஏற்ப தயாரிக்கப்படுகின்றன, என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form