இந்தியாவின் நம்பர் 1 பிக்கப் பிராண்டான பொலேரோ பிக்-அப் தயாரிப்பாளர்களான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம் அண்ட் எம்) தனது ஆல் நியூ பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசையை அறிமுகப்படுத்தியது. ரூ. 7.85 இலட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்கும் ஆல் நியூ பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசையானது, வாடிக்கையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கு முன்னோடியில்லாத மதிப்பை வழங்கும் சக்திவாய்ந்த அம்சங்களையும் செயல்திறனையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலகுவான, மிகவும் கச்சிதமான மற்றும் பன்பயன்பாடுகளைக் கொண்ட இந்த ஆல் நியூ பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசை, சுமக்கும் திறன், எரிபொருள் திறன், பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த ஓட்டுநர் அனுபவத்திற்கான புதிய தரநிலைகளை அமைக்கிறது. முன்னெப்போதையும் விட அதிக மதிப்பை வழங்குவதற்கு இது புத்திசாலித்தனமான பொறியியலையும் பயன்படுத்துகிறது.
புதிய பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசையை ஒரு குறைந்தபட்ச முன் பணமான ரூ.24,999ஐ செலுத்தி முன்பதிவு செய்யலாம், மஹிந்திரா தடையற்ற கொள்முதல் மற்றும் உரிமை அனுபவத்திற்கான கவர்ச்சிகரமான நிதி திட்டங்களையும் வழங்குகிறது.
இந்த ஆல் நியூ பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசை, பொலேரோ டிஎன்ஏவுக்கு இணையான முக்கிய மதிப்புகள் மற்றும் பலங்களான வலிமை, கடினத்தன்மை, நம்பகத்தன்மை, குறைந்த பராமரிப்புச் செலவு மற்றும் அதிக மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றை எடுத்துச் செல்லும் அதே வேளையில் புதிய இயங்குதளத்துடன் புரட்சி ஏற்படுத்துவதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. நாடு முழுவதும் நகர்ப்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் ஆதிக்கம் செலுத்தும் பொலேரோ வின் குறைந்தபட்ச மற்றும் உன்னதமான வடிவமைப்பு அழகியலையும் இது பராமரிக்கிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஆட்டோமோட்டிவ் டிவிசன் தலைவர் வீஜய் நக்ரா கூறுகையில், 'மேக் இன் இந்தியா' முயற்சியில் ஆழ்ந்த உறுதியுடன் உள்ள நிறுவனமாக, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தயாரிப்புகளை முன்னோடியாக உருவாக்கி மேம்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்வது மாத்திரமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான எங்களின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கிறோம். மஹிந்திராவில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வளர்ச்சி மற்றும் செழுமைக்கு உதவும் பல்பயன்பாடு வாகனங்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை வளப்படுத்த நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இந்த ஆல் நியூ பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசை, அதிநவீன அம்சங்கள், ஒப்பிடமுடியாத ஆற்றல், அதிகபட்ச சுமந்து செல்லும் திறன் மற்றும் அதிக மைலேஜ் ஆகியவற்றை வழங்கி, ஒவ்வொரு பயணமும் பயனளிப்பதாக மற்றும் ஓட்டுநர்களுக்கு சோர்வு இல்லாததாக உறுதியளிக்கிறது. உண்மையான அதிகபட்ச அனுபவத்தைத் தேடும் எவருக்கும் இது தகுதியான தேர்வாக கவர்ந்திழுக்கிறது. இந்த தயாரிப்பு வரிசையில், வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிடமுடியாத மதிப்பை வழங்குவதற்கும், பிக்-அப் பிரிவில் புதிய தரநிலைகளை நிறுவுவதற்கும் மஹிந்திராவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்று கூறினார்.
இந்த ஆல் நியூ பொலேரோ மேக்ஸ் பிக்-அப் வரிசையானது, எச்டி தொடர்கள் (எச்டி 2.0 லிட், 1.7லி மற்றும் 1.7, 1.3) மற்றும் சிட்டி சீரிஸ் (சிட்டி 1.3, 1.4, 1.5 மற்றும் சிட்டி சிஎன்ஜி) ஆகிய இரண்டு தொடர்களில் வருகிறது. மேலும் அதிக செயல்பாட்டு மற்றும் சம்பாதிக்கும் திறன் மற்றும் தடையற்ற மற்றும் மகிழ்ச்சிகரமான சாலை அனுபவம் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த புதிய வரிசை, அதிக சுமை சுமக்கும் திறன், சிறந்த மைலேஜ் மற்றும் செயல்திறன், மேம்பட்ட வசதி மற்றும் பாதுகாப்பு மற்றும் மிகவும் நம்பகமான மற்றும் திறமையான போக்குவரத்து தீர்வை வழங்குகிறது.
சிட்டி வரிசையில் சிட்டி 1.3 எல் எக்ஸ் சிபிசி ரக வாகனம் ரூ. 7.85 லட்சம், சிட்டி 1.3 எல்எக்ஸ் ரூ.7.95 லட்சம், சிட்டி 1.4 எல்எக்ஸ் சிபிசி ரூ.8.22 லட்சம், சிட்டி 1.4. எல்எக்ஸ் ரூ.8.34 லட்சம், சிட்டி 1.5 எல்எக்ஸ் சிபிசி ரூ.8.22 லட்சம், சிட்டி 1.5 எல்எக்ஸ் ரூ.8.34 லட்சம், சிட்டி சிஎன்ஜி ரு.8.25 லட்சம், எச்டி 1.7 எல்எக்ஸ் சிபிசி ரூ.9.26 லட்சம், எச்டி 1.7 எல்எக்ஸ் ரூ.9.53 லட்சம், எச்டி 1.7எல் எல்எக்ஸ் ரூ.9.83 லட்சம், எச்டி 2.0எல் எல்எக்ஸ் சிபிசி ரூ.9.99 லட்சம், எச்டி 2.0எல் எல்எக்ஸ் ரூ.10.33 லட்சம் ஆகிய எக்ஸ் ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது. விஎக்ஸ்ஐ மாறுபாட்டின் விலை எல்எக்ஸ் வகையை விட ரூ.25000 முதல் ரூ.30000 வரை அதிகமாக விலையிடப்பட்டுள்ளது. தங்க நிறம் வெள்ளை நிறத்தை விட ரூ.5000 அதிகம், என்று மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.