இந்தியாவின் முன்னணி வீட்டு நிதி நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் (ஐசிஐசிஐ எச்எஃப்சி), நாட்டில் தனது 200வது கிளையைத் தொடங்குவதன் மூலம், ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளது. தூத்துக்குடி கிளையானது, தமிழ்நாட்டின் 11வது கிளையும், இந்த நகரத்தில் முதல் கிளையும் ஆக இருக்கிறது.
இந்த புதிய கிளையின் துவக்கமானது, சிறிய நகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ளவர்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் மற்றும் LAP தீர்வுகளை வழங்குவதில் ICICI HFC இன் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாக இருக்கிறது. ICICI HFC, 2023 நிதியாண்டில் 40க்கும் மேற்பட்ட கிளைகளைத் திறந்து, மார்ச் 2023க்குள் இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இந்த ஆண்டை முடிக்கிறது.
பரந்த அளவிலான விவரக்குறிப்புகள் மற்றும் சொத்துக்களில் வீட்டுக் கடன் மற்றும் LAP விண்ணப்பங்களைச் செயல்படுத்தும் திறனை இந்த நிறுவனம் கொண்டுள்ளது. ரொக்க சம்பளம் பெறுபவர், வங்கி மூலம் சம்பளம் பெறுபவர், சுயதொழில் செய்பவர்கள், வர்த்தகர்கள், மதிப்பிடப்பட்ட வருமானம் போன்ற பல்வேறு பின்னணிகளைக் கொண்ட வீட்டுக் கடன் நாடுபவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.
தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகவும் மற்றும் மாநிலத்தின் முக்கிய லாஜிஸ்டிக்ஸ் மற்றும் கடலோர வேலைவாய்ப்பு மையமாக இருப்பதால், இது ஒரு முக்கியமான மையமாக உள்ளது. திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகியவற்றுடன் இது அருகாமையில் இணைக்கப்பட்டுள்ளதால், சுற்றுலா நடவடிக்கைக்காகவும் இந்த நகரம் ஊக்குவிக்கப்படுகிறது. இது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் அணுகக்கூடிய, வீடுகளுக்கான வலுவான தேவையை உருவாக்கியுள்ளது.
இந்த 200வது கிளை துவக்க சாதனையைக் குறித்து ஐசிஐசிஐ ஹோம் ஃபைனான்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அனிருத் கமானி கூறுகையில், " தூத்துக்குடியில் எங்களது 200வது கிளை தொடங்கப்பட உள்ளதை அறிவிப்பதில் நாங்கள் உற்சாகம் அடைகிறோம். தமிழ்நாடு மாநிலமானது, வீட்டுக் கடன்களுக்கான ஒரு அதிக தேவையுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சந்தையாக இருக்கிறது. எங்கள் வளர்ச்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, அபரிமிதமான திறனை வெளிப்படுத்தியுள்ள இந்த மாநிலத்தில், குறிப்பிட்ட இடங்களை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம், எனவே, தங்கள் சொந்த வீட்டைக் கனவு காணும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும், எங்கள் பரந்த வீட்டுக் கடன் தயாரிப்பு இலாகாவை விரிவுபடுத்துகிறோம். இந்த சாதனையானது, வாடிக்கையாளர்களுக்கு, புதுமையான வீட்டுக் கடன் தீர்வுகளின் தொகுப்புடன் சேவை செய்வதில், எங்களின் வலுவான உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது."என்றார்.