ரூ.79,999க்கு அறிமுகமாகும் ஓப்போவின் ஃபைண்ட் என்2 ப்ளிப் ஸ்மார்ட்போன்

 


உலகளவில் முன்னணி ஸ்மார்ட் சாதன பிராண்டான ஓப்போ, அதன் ஃபிளாக்ஷிப் ஃபைண்ட் என்2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.89,999/-க்கு கிடைக்குமென அறிவித்துள்ளது. இந்த போன் வரும் மார்ச் 17, நண்பகல் 12 மணி முதல், ஓப்போ ஸ்டோர்ஸ், ஃபிளிப்கார்ட்  மற்றும் முக்கிய ரீடெயில் ஸ்டோர்களில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை கேஷ்பேக் மற்றும் ஊக்கத்தொகைகள் அல்லது சிறப்பு சலுகைகள் மூலம் மிகக் குறைவாக ரூ. 79,999/-க்கு வாங்கலாம்.

இது ஆஸ்ட்ரல் பிளாக் மற்றும் மூன்லிட் பர்ப்பிள் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோட்டக் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, எச்டிபி ஃபைனான்சியல் சர்வீசஸ், ஒன்கார்டு அண்ட் அமெக்ஸ் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் 9 மாதங்கள் வரை கூடுதல் கட்டணமில்லா நோ-காஸ்ட் ஈஎம்ஐ   வசதியையும், ரூ.5000 வரைகேஷ்பேக்கையும் பெற முடியும்.

ஓப்போவின் இந்த அறிமுக ஃபிளிப் போனில் பயன்படுத்தபடும் அனைத்திலும் புதிய ப்ளக்சியான் ஹிஞ்ச் டிசைன், இந்த போன் பிரிவில் தரத்தில் ஒரு புதிய உச்சமாகும். இந்த ஃபிளக்சியான் ஹிஞ்ச், ஒரு வாட்டர் டிராப் ஃபோல்டை உருவாக்குவதால், மற்ற ஃபோல்டபிள் ஸ்மார்ட் போன்களில் சாத்தியமில்லாத வகையில் மெயின் டிஸ்பிளேவில் ஆழமில்லாத, மெலிதான கிரீஸை சாத்தியமாக்குகிறது தரநிலை சான்றளிக்கும் வெளி நிறுவனமான டியுவி ரெயின்லேண்ட், ஓப்போ ஃபைண்ட் என்2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனை 4,00,000 முறை மூடி-திறப்பதை தாங்குமென சான்றளித்துள்ளது. 

சாதனத்தில் பொறியியல் ரீதியாக நேர்த்தியாக-பொருத்தப்பட்ட ஹிஞ்ச் - ஒருபெரிய 3.26-இன்ச் கவர் ஸ்கிரீனை போனில் வைக்க ஓப்போவிற்கு உதவியுள்ளது. 17:9 என்ற அளவில் ஒருவெர்ட்டிகல் லே அவுட்டுடன் ஃபோனின் மேல் பாதியில் 48.5 சதவீதமாக இந்த ஸ்கிரீன் உள்ளது.இந்த டிஸ்பிளே ஈடுபாடு மிக்க புதிய பயனர் அனுபவங்களை சாத்தியமாக்குகிறது. ஓப்போ ஃபைண்ட் என்2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் பாலிஷ் செய்யப்பட்ட அலுமினியம் சைடுகளையும்,விளிம்புகளில் வளையும் விதத்தில் கர்வ் அமைப்புடன் கூடிய பின்புற மேட் கிளாஸையும் கொண்டுள்ளதால் இது கையில் வைத்திருக்கவும், பயன்படுத்தவும் சௌகரியமாக இருக்கும். இதன் எடை வெறும் 191கிரம் மட்டுமே, மற்றும் இதன் தடிமன் ஃபிளிப் திறந்த நிலையில் வெறும் 7.45மிமீ தான்.

இந்த ஸ்மார்ட்போனின் பெரிய6.8-இன்ச் ஈ6 எஎம்ஒஎல்இடி டிஸ்ப்ளே,  சினிமாட்டிக் 21:9 ஆஸ்பெக்ட் விகிதம், 1600 நிட்பிரகாசமும், 120 ஹெர்ட்ஸ் ரிஃபிரெஷ் ரேட் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. அதில் உயர்-ரிசல்யூஷன் கேமரா சென்சார்கள் மற்றும் ஓப்போவின் சொந்த மாரிசிலிக்கான்  மற்றும் எம்பியு இணைந்து செயல்படுவதால், குறைந்த-வெளிச்சத்தில் 4கே வீடியோகிராஃபியை சாத்தியமாக்குகிறது. அதன் நம்பகமான இமேஜிங் திறனை மேலும் அதிகரிக்க, ஹாசல்ப்ளாட் நேச்சுரல்கலர் சொல்யூஷன் என்கிற சிறப்பம்சத்தை கேமரா சிஸ்டத்தில் ஒருங்கிணைத்துள்ளது. இந்த தனித்துவமான கலர்-புராசஸிங் சிஸ்டம் நீங்கள் ஷட்டர் பட்டனை அழுத்தும் தருணத்தில் செயலபடத் துவங்கி - நிறத்துல்லியம், டோன் மற்றும் கான்ட்ராஸ்ட்  ஆகியவற்றை மேம்படுத்தி சீரான மற்றும் துல்லியமான படங்களை உங்களுக்கு வழங்குகிறது. 

ஓப்போ ஃபைண்ட் என்2 ஃப்ளிப்  ஸ்மார்ட்போனில் உள்ள 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்890 பிரைமரி சென்சார் -ஆல்-பிக்சல் ஓம்னி டைரக்ஷனல் இன்டெலிஜென்ட் ஃபோகஸிங் அம்சத்துடன் வருகிறது.இந்த கைபேசியில் மேலும் ஒரு 8எம்பி அல்ட்ரா-வைட் சோனி ஐஎம்எக்ஸ்355 பின்புற ஸ்னாப்பரும் உள்ளது. செல்ஃபிக்களுக்காக இதில் ஒரு 32எம்பி சோனி ஐஎம்எக்ஸ்709 முன்பக்க ஷூட்டர் உள்ளது.

ஐஎம்எக்ஸ்709 இன் ஆர்ஜிபிடபிள்யு பிக்ஸல் அர்ரே அம்சம் தலைசிறந்த நாய்ஸ் சப்ரஷனை வழங்குகிறது. 5ஜி செயல்படுத்தப்பட்ட மீடியா டெக்டைமன்சிட்டி 9000+புராசஸரில் இயங்குகிறது. இதன் 44வாட் சூப்பர்விஓஓசிடிஎம் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியானது சாதனத்தை 23 நிமிடங்களில் 50 சதவீதத்திற்கு சார்ஜ் செய்கிறது. மேலும், நாள் முழுவதுமான பயன்பாட்டிற்கென ஓப்போ இதில் அதிக திறன்கொண்ட 4300 எம்ஏஎச் பேட்டரியைப் பயன்படுத்தியுள்ளது. 

ஸ்டீரியோ ஸ்பீக்கர்ளுடன் வருகிறது. ஓப்போ ஃபண்ட் என்2 ஃபிளிப் ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அனுபவங்களை ஒன்றாக பிணைப்பது அதன் கலர் ஓஎஸ் 13 ஆகும். கூடுதலாக, ஓப்போ ஃபைண்ட் என்2 ஃப்ளிப் ஸ்மார்ட்போன் நான்கு வருட ஆண்ட்ராய்டு மற்றும் ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்களுடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்து பேசிய, ஓப்போ இந்தியா நிறுவனத்தின், தலைமை மார்கெட்டிங் அலுவலர், தம்யந்த் சிங் கனோரியா, “பயனுள்ள நவீனத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற ஓப்போ நிறுவனத்தின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கடைபிடிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்வதோடு,எங்களது சமீபத்திய கண்டுபிடிப்பான ஃபைண்ட் என் 2 ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அறிவிப்பதிலும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நேர்த்தியான ஸ்மார்ட்போனில் ஒரு பெரிய வெர்ட்டிகல் கவர்ஸ்கிரீன், கண்ணுக்கு தெரியாத ஒருகிரீஸ், ஆற்றல்  மிக்க கேமராக்கள் மற்றும் அதன் சாதன வகைகளில் நீடித்த பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. ஸ்டைல், செயல்திறன் மற்றும் நீடித்து உழைப்பது போன்றவற்றை எதிர்பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு சரியான தேர்வாக இருக்கும்.இந்த ஃபிளிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் மட்டுமின்றி,உலகம் முழுவதும் உள்ள ஃபிளிப் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒரு புரட்சியை ஏற்படுத்துமென நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form