மோடோரோலாவின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்மோடோரோலா  தனது ஜி வரிசை புத்தம் புதிய 5ஜி ஸ்மார்ட்ஃபோன் மோடோ ஜி73 5ஜி அறிமுகம் குறித்த அறிவிப்பை அறிவித்தது. இந்த ஸ்மார்ட் போன் மிட்நைட் ப்ளூ மற்றும் லூஸெண்ட் வொயிட் ஆகிய இரு கண்கவர் வண்ணங்களில்  கிடைக்கும்.

ஃப்ளிப்கார்ட்டில் 2023 மார்ச் 16 தேதி 12 மணி முதல் மோடோரோலா.இன் மற்றும் ரிலையன்ஸ் டிஜிடல் உள்ளிட்ட முன்னணி சில்லரைக் கடைகளில் ஸ்மார்ட்ஃபோன் விற்பனைக்குக் கிடைக்கும்.  இதன் அறிமுக விலை ரூ 18,999/- ஆகும். அறிமுகத்தின் ஒரு பகுதியாக மோடோரோலா தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ 2000/- கூடுதல் தள்ளுபடியை எக்ஸ்சேஞ்ச் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் வழியே கிரெடிட் அட்டை பரிமாற்றங்கள் மூலம் பொருள் வாங்கும் போது பெறலாம்.   நுகர்வோர் 3 மற்றும் 6 மாதங்கள் நோ காஸ்ட் இஎம்ஐ வசதிகளை ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் மூலம் ரூ 3167/- தொடங்கி பெறலாம்.  பிரத்யேக சலுகை விலை ரூ 16,999/- ஆகும்.

மோடோ ஜி73 5ஜி ஸ்மார்ட்ஃபோனில் அல்ட்ரா பிக்ஸெல் தொழில்நுட்பத்துடன் கூடிய ஃப்ளாக்ஷிப் கிரேட் 50 எம்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மீடியா டெக் டைடென்சிடி 930, அதிக வேகமான மற்றும் அதிக சக்தி வாய்ந்த 2.2 ஜிஹெச்இசட் ஃப்ரீக்வென்ஸி வரை வழங்கும் ஆக்டா கோர் புராசஸர் பொருத்தப்பட்டுள்ளன. 8 ஜிபி ராம் காரணமாக உங்கள் செயலிகள் மற்றும் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். 13.5 பேண்ட் மூலம் உண்மையான 5ஜி அனுபவத்தை வழங்குவதுடன், 3 கேரியர் அக்ரெஷ்சன் மற்றும் 4க்கு4 எம்ஐஎம்ஓ மேம்பட்ட அம்சங்களுக்கு ஆதரவு அளிப்பதால் மின்னல் வேகத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

 இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 6.5 இன்ச் எஃப்ஹெச்டி டிஸ்ப்ளே, 120 ஹெச்இசட் ரிஃப்ரெஷ் விகிதம் ஆகியவை தங்கு தடையற்ற கேம்பிளே மற்றும் இடையுறு இல்லாத ஸ்க்ரோலிங்க் ஆகியவற்றுக்கு உதவும். டால்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட ஸ்டீரியோ ஸ்பிக்கர்கள் மல்டி டைமென்ஷனல் ஒலியில் உங்களை மூழ்கடித்துக் கொள்ளலாம். ஸ்மார்ட்ஃபோனில் உள்ள 5000எம்ஏஹெச் பேட்டரி திறன் அதன் சார்ஜை அன்றைய நாள் மட்டுமின்றி அடுத்த நாளும் வைத்திருக்கும்.  டர்போ பவர் 30வாட் சார்ஜர் மூலம் ஒரு சில நிமிடங்களில் சார்ஜ் பெறலாம்.

மோடோ ஜி73 5ஜிஇல் ஆண்ட்ராயிட் 13,128ஜிபி உள்ளீடு செய்யப்பட்டுள்ளதால் ஏராளமான ஸ்டோரேஜ் வசதி, 1டிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டையைப் பயன்படுத்தி எளிதாக விரிவுபடுத்துதல், தண்ணீர் புகாத வாட்டர் ரிபெல்லண்ட் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன்  கண்கவர் அக்ரிலிக் கண்ணாடி உடலமைப்பு கொண்ட ஸ்மார்ட்ஃபோன் 8.29 மிமி மெல்லியதாகும். ஸ்மார்ட்ஃபோனில் உள்ள மோடோ செக்யூர் அம்சம் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும். 

 இதன் செக்யூர் ஃபோல்டரில் உங்கள் தனிப்பட்ட கோப்புகளையும், செயலிகளையும்  பாதுகாப்பாக வைக்கலாம்.  இதிலுள்ள பின் ஸ்க்ராம்பிள் வசதி, பின் லே அவுட்டை அடிக்கடி மாற்றுவதால், நீங்கள் பின் செய்வதைப் பார்த்து யாராலும் ஊகிக்க முடியாது. மோடோ ஜி73 5ஜி யுஐ ஃபேமிலி ஸ்பேஸ் அம்சத்தைக் கொண்டுள்ளது.  உங்கள் பெற்றோர்கள் அல்லது குழந்தைகளின் ஸ்மார்ட்ஃபோன்களைத் தொடாமலேயே தொலைதூரத்திலிருந்து நீங்கள் மேலாண்மை செய்ய வேண்டுமெனில் இந்தத் தொழில்நுட்பம் உதவியாக இருக்கும். மேற்கூறிய சிறப்பம்சங்களுடன் மோடோ ஜி73 5ஜி ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராயிட் 14 ப்ராமிஸ்ட் அப்கிரேட், 3 ஆண்டுகள் செக்யூரிடி அப்டேட், மொபைல்களுக்கான திங்க்ஷீல்ட் பிசினஸ் கிரேட் செக்யூரிடி ஆகியவை உண்டு என மோடோரோலா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form