கிளியர் பிரீமியம் பிராண்டுடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்

 


பாட்டில் குடிநீர் விற்பனையில் முன்னணி நிறுவனமாக திகழும் கிளியர் பிரீமியம் வாட்டர் பிராண்டின் விளம்பர தூதராக இந்திப்பட சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதன் தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் தனது ஆரோக்கியமான தயாரிப்புகள் மூலம் மக்களுக்கு சேவை செய்வதை தனது இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ஹிருத்திக் உடன் இணைவதன் மூலம் இந்த சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த நிறுவனம் தயாராக உள்ளது.இதன் தண்ணீர் பாட்டில்கள் 200, 500 மிலி, 1, 2 மற்றும் 5 லிட்டர் பாட்டில்களில் விற்பனை செய்யப்படுகிறது

இது குறித்து கிளியர் பிரீமியம் வாட்டர் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நயன் ஷா கூறுகையில், ”எங்கள் பிராண்டை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அத்துடன் தற்போது நாங்கள் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்திருப்பதன் மூலம் எங்கள் வர்த்தக வளர்ச்சியானது அடுத்த நிலைக்கு செல்லும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷன் கூறுகையில், ”பாதுகாப்பான மற்றும் அதிக தாதுக்கள் நிறைந்த தண்ணீரைக் குடிக்க மக்களை ஊக்குவிக்கும் பயணத்தில், நாட்டின் மிகவும் விருப்பமான மற்றும் உயர்தர தண்ணீர் பிராண்டுகளில் ஒன்றான கிளியர் நிறுவனத்துடன் நான் இணைவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்நிறுவனத்தின் ஆரோக்கியமான தயாரிப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையை ஆரோக்கியமுடன் வாழ்வோம். அதே சமயம் நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றின் மீது அதிக அக்கறை செலுத்துவோம்” என்று கூறினார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form