பருவநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமடைதல் குறித்து யெஸ்வேர்ல்டின் புதிய பிரச்சாரம் துவக்கம்

 


புவி வெப்பமடைதல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை வழங்கும் விதமாக ‘பூமியை காப்போம்’ என்னும் திட்டத்தை யெஸ் வேர்ல்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. யெஸ் வேர்ல்டு, புவி வெப்பமடைதல் என்ற மிகப் பெரிய பிரச்சனையிலிருந்து பூமியை காக்க காலநிலை தொழில்நுட்பத் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பருவ நிலை மாற்றம் என்பது தற்போதைய காலக்கட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. பருவ நிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த யெஸ் வேர்ல்டு நிறுவனம் சமூகம் சார்ந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த திட்டத்திற்கான ஆர்வலராக யெஸ் வேர்ல்டு நிறுவனத்தின் புரமோட்டார் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தீப் சவுத்ரி செயல்பட்டு வருகிறார். மேலும் அவர் பூமியைக் காப்பாற்றுவதற்கான உலகின் மிகப்பெரிய பணியை மேற்கொண்டு வருகிறார். பூமியை காப்பாற்றும் இந்த உலகின் மிகப்பெரிய பணிக்காக 50 மில்லியன் அமெரிக்க டாலர் நிறுவனமான பேங்க்சதி டெக்னாலஜிஸ் என்ற நிதி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய இவர் அந்த பணியில் இருந்து வெளியேறினார். அன்றிலிருந்து கார்பன் வெளியேற்றத்தை குறைக்க அயராது பணியாற்றி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சமூக தொண்டு நிறுவனங்களுக்கு இடையே இவரும் சிறப்பாக பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக "புவி வெப்பமயமாதலை நிறுத்துவது அனைவரின் பொறுப்பு" என்ற பிரச்சாரத்தை சந்தீப் சவுத்ரி துவக்கி உள்ளார்.

இந்த பிரச்சாரத்தை துவக்கி வைத்து சந்தீப் செளத்ரி கூறுகையில், ” பல விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, புவி வெப்பமடைதல் மிகவும் ஆபத்தான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதைத் தடுக்க நாம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாவிட்டால் 2040-ம் ஆண்டுக்குள் இந்த பூமி மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும். இன்றைய சூழலில் பருவநிலை மாற்றம் என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உண்மையில், நம் அனைவரின் எதிர்காலமும் ஆபத்தில் உள்ளது. இது தொடர்பாக அரசு சார்பில் பல்வேறு கூட்டங்கள் நடைபெறுகின்றன, அதில் அவர்கள் பல வாக்குறுதிகளை வழங்குகிறார்கள், ஆனால் இதுவரை எந்த உறுதியான முடிவும் வெளிவரவில்லை என்பது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. புவி வெப்பமடைவதைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க வேண்டும். குறிப்பாக குறைந்த அளவு கார்பன் வெளியேற்றத்தை உறுதி செய்வது என்பது இங்கு வாழும் நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று கூறினார்.

யெஸ் வேர்ல்டு கிளைமெட் டெக் நிறுவனம், வீடு மற்றும் வணிக கட்டிடங்களுக்கு உலகின் முதல் ஆற்றல் திறன் கொண்ட ஜன்னல்களை அறிமுகப்படுத்தி உள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் தடயத்தைக் குறைப்பதற்கான இந்நிறுவனத்தின் ‘பூமியை காப்போம்’ திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய சிறப்பு ஜன்னல் கண்ணாடிகள் உள்ளது. இந்த கண்ணாடிகள் டபுள் பேன் கிளாஸ் மற்றும் சான்விட்ச் கிளாஸ் என இரண்டு வகைகளில் வருகிறது. சூரிய ஒளி வெப்பத்தின் பெரும்பகுதியை பிரதிபலிக்கும் வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. ஆற்றல்-திறனுள்ள கண்ணாடி என்பது ஜன்னல்கள் வழியே சூரிய வெப்பம் கட்டிடத்திற்குள் நுழைவதைத் தடுக்கிறது மற்றும் ஆற்றல் நுகர்வை வெகுவாக குறைக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form