இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பயண நிறுவனங்களில் ஒன்றான யாத்ரா ஆன்லைன் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கு மன அழுத்தமில்லாத பயணத்தை வழங்குவதற்காக ‘ஜப் யாத்ரா ஹை தோ காஹே கா டர், #பிண்டாஸ்ப்ளான்கர் என்ற சமீபத்தைய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
யாத்ரா டாட் காமில் உள்ள ரத்துசெய்யும் பாதுகாப்பு அம்சத்தின் மீது இந்த பிரச்சாரம் கவனம் செலுத்துகிறது, இது பயணிகளுக்கு தொல்லை தரும் இடையூறுகள் அல்லது உறுதி செய்யப்படாத திட்டங்கள் இருந்தபோதிலும் பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்கிறது. ரத்துசெய்யும் பாதுகாப்பு என்பது யாத்ராவின் இணையதளம், மொபைல் தளம் மற்றும் மொபைல் செயலியில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் யாத்ராவின் வாடிக்கையாளர்களுக்கு ‘லிபர்டி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட்’ வழங்கும் இன்சூரன்ஸ் பாலிசியாகும். விமான டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில், விமான டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு இந்த புராடக்ட் உதவுகிறது.
இந்த சமீபத்திய ஆஃபர் மற்றும் டிரைவ்-காக 3 டிஜிட்டல் வீடியோ விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. இந்த 3 டிவிசிக்களும் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வதில் இருக்கும் அச்சங்கள் மற்றும் ரத்துசெய்தல் பாதுகாப்பின் அம்சம் கவலையை எவ்வாறு நிவர்த்தி செய்கிறது என்பதை காட்டுவதாக யாத்ரா ஆன்லைன் லிமிடெட் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.