இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் அறிமுகம்



பால் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்குவதில் முன்னணி வகிக்கும் எவரெஸ்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் தனது சமீபத்திய தயாரிப்பான ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர்  கருவியைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.  ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லியமான மற்றும் திறமையன பாலின் தரப் பகுப்பாய்வை வழங்குகிறது. அனைவருக்கும் ஏற்ற விலையில் கிடைக்கும் இக்ருவி,  ஃபாட், எஸ்என்எஃப், கூடுதல் தண்ணீர், அடர்த்தி, புரதம், லாக்டோஸ் சதவிகித அளவுகளை 30 வினாடிக்குள் தெரிவிக்கும் திறன் கொண்டதாகும். 

தேசிய பால் வளர்ச்சிக் கழக அவைத் தலைவர் மீனேஷ் ஷா, இந்தியப் பால் சங்கத் தலைவர் ஆர் எஸ் சோதி, அமுல் பால நிறுவன மேலாண் இயக்குனர் அமீத் வியாஸ், பன்னாட்டுப் பால் கூட்டமைப்பின் தலைவர் பியர்கிரிஸ்டினோ ப்ரேசாலே, தொழில்நுட்ப நிபுணர்கள், ஐடிஏ உறுப்பினர்கள் மற்றும் பால் துறைப் பிரதிநிதிகள் ஆகியோர் முன்னினையில் ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஃபாட்ஸ்கேன் மில்க் அனலிசர் கருவி காந்திநகரில் மார்ச் 16-18 வரை நடைபெற்ற 49ஆவது பால் துறை மாநாடு மற்றும் பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமீத் ஷா, மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், குஜராத் கூட்டுறவு அமைச்சர் ஜக்தீஷ் விஸ்வகர்மா ஆகியோர் பொருட்காட்சிக்கு வருகை தந்த போது, அங்குள்ள எவரெஸ்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் அரங்கில், ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் கருவியை அறிமுகப்படுத்தினர். இறக்குமதியைத் தவிர்த்து உள்ளூர் தயரிப்பை ஊக்குவிக்கும் இந்தியாவில் தயாரி கொள்கைக்குப் பங்களிக்கும் வகையில் இக்கருவி உள்ளதாகப் பாராட்டினர். பயனீட்டாளர்-நட்பு இடைமுகம் மற்றும் உபயோகப்படுத்த எளிதான வடிவமைப்பு கொண்ட ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் அனைத்துப் பயனாளிகளுக்கும் ஏற்ற கருவியாகும்.  கையடக்கமாக எங்கும் எடுத்துச் செல்லும் வசதி கொண்ட இக்கருவியை பல்வகைச் செட்டிங்களில் பயன்படுத்தலாம்.

எவரெஸ்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் மேலாண் இயக்குனர் அஜீத் பட்டேல் பேசுகையில் ‘ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் துல்லியமான மற்றும் சரியான முடிவுகளை நிகழ் நேரத்தில் வழங்குகிறது. இதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பதப்படுத்துநர்கள் பாலின் தரம் தொடர்பாகச் சிறந்த முடிவுகள் எடுக்கவும், மேம்பட்ட திறன் மற்றும் இலாபம் பெறச் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவும்’ என்றார்.

இது குறித்து எவரெஸ்ட் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் இணை மேலாண் இயக்குனர் பரிமல் பட்டேல் கூறுகையில் ‘இந்தியாவில் தயாரி மற்றும் தற்சார்பு பாரதம் பிரச்சாரங்களுக்கு ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைச்சர் ஊக்கம் தருகிறது. இதுவரை, பால் பகுப்பாய்வக் கருவிகள் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், ஃபாட்ஸ்கேன் மில்க் அனலைசர் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரான கருவியாகும். பால் மற்றும் பால் பொருள்களின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பை விரிவுபடுத்தவும், இக்கருவி கணிசமான பங்களிப்பை நுகர்வோர்க்கு வழங்குமென உறுதியுடன் நம்புகிறோம்’ என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form