ஹிமாலயாவின் புதிய பிரச்சாரம் துவக்கம்


மன அழுத்தம் அதிகரித்து வரும் இன்றைய சூழலில், இந்தியாவின் முன்னணி ஆரோக்கிய பிராண்டுகளில் ஒன்றான ஹிமாலயா வெல்னஸ் கம்பெனி, கவனிக்கப்படாத மன அழுத்தத்தின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதேநேரத்தில் வாழ்க்கையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகள் குறித்த இயற்கையான வழிகளில் கவனம் செலுத்தவும் “இப்போது ஸ்ட்ரெஸ் இல்லை, டீ-ஸ்ட்ரெஸ் செய்யுங்கள்” என்ற விளம்பரப் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது. 

இந்த விளம்பரப் பிரச்சாரம், அன்றாட வாழ்வில் மன அழுத்தத்தைக் குறைத்து, குழப்பமான மன நிலையிலிருந்து விடுவித்து அமைதியை அளிக்க உதவும் ‘ஹிமாலயா அஸ்வகந்தா’வின் பங்களிப்பை வலியுறுத்துகிறது. மாத்திரைகளாக கிடைக்கும் ஹிமாலயா அஸ்வகந்தாவின் ஒவ்வொரு மாத்திரையிலும் 250 மில்லிகிராம் தூய அஸ்வகந்தா (வித்தானியா சோம்னிஃபெரா ) வேரின் சாறு உள்ளது. ஹிமாலயா அஸ்வகந்தா 100 சதவீதம் சைவமாகும்.

சிறந்த முறையில் உருவாக்கப்பட்ட இந்த மூன்று டிஜிட்டல் விளம்பரங்கள் - பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மூன்று நபர்கள் அவரவர் வாழ்க்கை முறையினால் ஏற்படும் மன அழுத்தத்தைச் சமாளிக்கப் போராடுவதை காண்பிப்பதில் கவனம் செலுத்துகின்றன. விளம்பரத்தில், மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவும் ஹிமாலயா அஸ்வகந்தாவின் நன்மைகளைப் பற்றி மருத்துவர் பேசுவதன் மூலம் அது குறித்த தகவல் தெளிவாகப் பகிரப்படுகிறது. 

அஸ்வகந்தா பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் (அடாப்டோஜெனிக்) ஒரு மூலிகையாகும்; இது மன அழுத்தத்தைச் சமாளிக்கவும், மன அமைதிக்கும் உதவுகிறது. இது உடலின் ஆற்றல் அளவினை மேம்படுத்தி, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவுகிறது.

மும்பையைச் சேர்ந்த பிரபல உட்சுரப்பியல் மற்றும் நீரிழிவு நிபுணரான, டாக்டர். திரு. சஞ்சீவ் ஷா, “பலருக்கு மன அழுத்தம் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முறையாக நிர்வகிக்கப்படாத மன அழுத்தம் ஒருவரது ஆரோக்கியத்தில் - தூக்கமின்மை, சோர்வு, பதற்றம் மற்றும் மனச்சோர்வு உள்ளிட்ட எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நடைப்பயிற்சி செய்தல், உடற்பயிற்சி செய்தல், ஒரு நல்ல பொழுதுபோக்கு பழக்கத்தை பின்பற்றுதல், புகைபிடித்தல் மற்றும் குடிப்பதைத் தவிர்த்தல் போன்ற சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வது மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்க உதவும்”, என்று அறிவுறுத்தினார்.

ஹிமாலயா வெல்னெஸ் நிறுவனத்தில், ஒடிசி பிஸ்னஸ் பிரிவிற்கு தலைமை தாங்கி வழிநடத்தும், விகாஸ் பன்சி கூறுகையில், “ஹிமாலயா அஸ்வகந்தா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் இயற்கையான சுகாதார தீர்வுகளை உருவாக்குவதில் ஹிமாலயா வெல்னெஸ் நிறுவனம் உறுதியாக இருப்பது பற்றி தெரியப்படுத்தவும் இந்த ஒருங்கிணைந்த வானொலி மற்றும் டிஜிட்டல் விளம்பரப் பிரச்சாரங்கள்  உதவுமென்றும் எதிர்பார்க்கிறோம். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இயற்கையாக  செயல்படும் உட்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன.  ஹிமாலயா அஸ்வகந்தாவை அவர்களின் அன்றாட வழக்கத்தில் ஒரு சப்ளிமென்ட்டாக கருதச் செய்வது, மற்றும் அதே நேரத்தில் இந்தியா முழுவதும் சிறந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதே எங்கள் நோக்கமாகும்”, என்று தெரிவத்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form