ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான புதிய சலுகை அறிவிப்பு

 


நாட்டின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டான ஷாவ்மி இந்தியா, குறைவான பட்ஜெட் பிரிவில் மிகவும் பிரபலமான அதன் சாதனங்களில் ஒன்றான - ரெட்மி 11 பிரைம் 4ஜி ஸ்மார்ட்போனுக்கு அட்டகாசமான புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128 ஜிபி என்று  இரண்டு ரகங்களில்  ரூ.12999/-,மற்றும் ரூ.14999/- க்கு கிடைக்கிறது. இதனை ரூ.11 மட்டும் செலுத்தி, மீதத் தொகையை பஜாஜ் ஃபின்சர்வ், எச்டிஎஃப்சி வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, மற்றும் எச்டிபி பைனான்ஷியல் சர்வீசஸ் ஆகியவற்றின் மூலம் செலுத்தும்‘கூடுதல் கட்டணமில்லா மாதாந்திர சுலபத் தவணை திட்டத்தில்’சாதனத்தைவாங்கிச் செல்லும் வாய்ப்பு நுகர்வோருக்கு கிடைக்கிறது.

 இந்த ஸ்மார்ட்போனை தங்களுக்கு அருகாமையில் உள்ள எம்ஐ ஹோம் மற்றும் எம்ஐ  ரீடெயில் பார்ட்னர்களிடம் வரும் பிப்ரவரி 28, 2023 வரை குறுகியகால சலுகையின் ஒரு பகுதியாக வாங்கும் நுகர்வோருக்கு, இச்சலுகைகள் பிரத்தியேகமாக கிடைக்கும்.

தலைசிறந்த 50 எம்பி ஏஐ  டிரிபில் கேமரா சிஸ்டம், அதனுடன் கூடிய 8 எம்பி முன்புற கேமராவும் உள்ளது. முற்றிலும் புதிய வடிவமைப்புடன், 90 எச்இசட் எஃப்எச்டி+ டிஸ்பிளே, மிகப்பெரிய 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும் இந்த சாதனம் - கட்டுப்படியாகக் கூடிய விலையில் ஒரு ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது மிகச்சரியான தேர்வாக இருக்கும். 

இந்த ரெட்மி 11 பிரைம் 4ஜி-யில் செயல்திறன் மிக்க, அதிவிரைவான மீடியாடெக் ஹீலியோ ஜி99 புராசஸர் ஒரு 6எம்எம் ஆர்க்கிடெக்ஷரில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் மேம்பட்ட பயனர் அனுபவத்தை அளிக்கிறது என ஷாவ்மி இந்தியா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form