இந்தியாவின் முன்னணி ஃபேஷன், ப்யூட்டி மற்றும் லைஃப்ஸ்டைல் ஷாப்பிங் டெஸ்டினேஷனுடன் தொடர்புடைய பிரபலங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த, பிரபல ஃபேஷன் நடிகையான தமன்னா பாட்டியாவை தனது பிராண்ட் அம்பாசிடராக இணைத்துக்கொண்டுள்ளதாக மைந்த்ரா அறிவித்தது.மைந்த்ராவின் சமீபத்திய பிராண்ட் பிரச்சாரத்தில் தமன்னா இடம்பெறவுள்ளார். இந்த விளம்பரம் விரைவில் வெளிவரவுள்ளது. மைந்த்ராவின் பிராண்ட் அம்பாசிடர்களில் ஒருவராகத் இருக்கும் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து மைந்த்ராவுக்காக அனைவரையும் கவரும் வகையில் தனித்துவமான முறையில் இந்த பிராண்ட் பிரச்சாரத்தை உருவாக்க உள்ளனர்.
மைந்த்ராவின் சமீபத்திய ' பீ எக்ஸார்டினரி எவ்வரி டே', என்ற ஃபேஷனை மையமாக கொண்ட பிராண்ட் பிரச்சாரமானது நாடு முழுவதும் உள்ள ஃபேஷன்-ஃபார்வர்டு ஷாப்பர்களை இலக்காகக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விளம்பரம் மைந்த்ராவை, பேஷன் உலகில் மக்கள் தங்கள் அன்றாட ஃபேஷனையும் ஸ்டைலையும் மேம்படுத்தும் சிறப்பான இடமாக நிலைநிறுத்துகிறது.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மைந்த்ரா, இந்தியா முழுவதிலும் உள்ள சிறந்த ஆளுமையுடையவர்களுடன் இணைவதுடன், பெருநகரங்கள் அல்லாத நுகர்வோருடன் இணைய அவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலான பொருத்தமான உள்ளடக்கங்களையும் உருவாக்கும். மைந்த்ராவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் சூப்பர் ஸ்டார்களான ரன்பீர் கபூர், கியாரா அத்வானி மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரை உள்ளடக்கிய குழுவில் தமன்னா இணைவதுடன், தேசத்தின் சினிமா என்ற பார்வையில், தனது தளத்தின் தொடர்பை மேலும் வலுப்படுத்த தனது சமீபத்திய ஆன்-ட்ரெண்ட் லுக்ஸ் மற்றும் ஃபேஷனுக்கான பயண இடமாக மைந்த்ராவை நிலைநிறுத்துகிறார்.
பிராண்ட் அம்பாசிடர்கள் தொடர்பான அறிவிப்பு குறித்து பேசிய மைந்த்ராவின் சிஎம்ஓ சுந்தர் பாலசுப்ரமணியன், “தமன்னாவை எங்கள் பிராண்ட் அம்பாசிடராக இணைத்துக்கொள்வதை அனைவருக்கும் அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மைந்த்ராவின் நட்சத்திர பிராண்ட் அம்பாசிடர்களின் குழுவில் தமன்னா இணைந்துள்ளதால் அவர் மைந்த்ராவை தெற்கிலும் அதற்கு அப்பாலும் பிரதிநிதித்துவப்படுத்த இந்த பிரச்சாரம் இன்னும் பிரம்மாண்டமானதாக்க தயாராக உள்ளது” என்றார்.
இந்த இணைப்பைப் பற்றி பேசிய தமன்னா பாட்டியா, “ஃபேஷன் துறையில் முன்னோடியாக இருக்கும் ஒரு பிராண்டுடன் இணைந்திருப்பது எனக்கு மிகவும் உற்சாகத்தை அளிக்கிறது! மைந்த்ராவின் பிராண்ட் பிரச்சாரங்களில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்தார்.