திண்டுக்கல் தலப்பாக்கட்டியின் 100வது கிளை சேலத்தில் திறப்பு



65 ஆண்டுகளுக்கு மேலாக பிரியாணிக்கு பெயர் பெற்ற திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகம் தற்போது சேலத்தில் உள்ள 5 ரோட்டில் 3000 சதுர அடியில் மிக பிரமாண்டமாக திறந்துள்ளது. இந்த உணவகம் 94 பேர் அமரும் வகையிலும், மேலும் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் செயல்படும்.

இந்த உணவகம் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உட்பட 92 உணவகங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மட்டும் 63 உணவகங்கள் உள்ளன. மேலும் திண்டுக்கல் தலப்பாகட்டி இந்தியாவின் No.1 உணவகமாக திகழ்கிறது..

திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகத்தில் பாரம்பரிய முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பிரியாணிக்கு உயர்தர சீரகசம்பா அரசி, சுத்தமான இறைச்சி, மற்றும் மசாலாக்கள் கொண்டு ருசியான பிரியாணி தயார் செய்யப்படுகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பாரிஸ், துபாய் மற்றும் இலங்கையிலும் தனது உணவகத்தை விரிவுபடுத்தியுள்ளது.



திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகத்தில், மட்டன் பிரியாணி, தீப்பொறி சிக்கன், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, சிக்கன் லாலிபாப், குளிர்பானங்கள் மற்றும் ஸ்வீட் ஆகியவை மிகவும் பிரபலமான உணவாகும். அசைவ பிரியர்களுக்கு மட்டுமில்லாமல் சைவ பிரியர்களுக்கும் பலவிதஉணவுகளை பரிமாறப்படுகிறது.

திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் நாகசாமி தனபாலன் கூறுகையில், சேலத்தில் திண்டுக்கல் தலப்பாகட்டி உணவகத்தை திறப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு உள்ள உணவு பிரியர்களுக்கு எங்கள் பாரம்பரிய செய்முறை மேலும் சுவையை தரும்” என்று கூறினார். 


Post a Comment

Previous Post Next Post

Contact Form