மோடோரோலா இ-வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

 


இ-வரிசை ஃப்ரான்சைஸில் மோடோ இ-13 புத்தம் புதிய ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம் குறித்த அறிவிப்பை மோடோரோலா வெளியிட்டுள்ளது.  இந்த ஸ்மார்ட்ஃபோன் இரு வேரியண்ட்களில் ரூ 6,999/- (2ஜிபி + 64ஜிபி) மற்றும் ரூ 7,999/- (4ஜிபி + 64ஜிபி) விலைகளில் கிடைக்கும். இது காஸ்மிக் பிளாக், ஆரோரா க்ரீன் மற்றும் க்ரீமி வொயிட் அகைய மூன்று கண்கவர் வண்ணங்களில்  கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் மற்றும் மோடோரோலா.இன் ஆகியவற்றில் 2023 பிப்ரவரி 15 முதல் ஸ்மார்ட்ஃபோன் கிடைக்கும். ஜியோ எக்ஸ்க்ளூசிவ் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ 700/- கேஷ்பேக் கிடைப்பதால் 2ஜிபி வேரியண்ட் ரூ 6,299/-, 4ஜிபி வேரியண்ட் ரூ 7,299/- விலைகளில் கிடைக்கும்.

மோடோ இ13 ஸ்மார்ட்ஃபோன் எல்லா வகையிலும் அசத்தலானது. மெல்லிய, ஸ்டைலான, பிரிமியம் வடிவமைப்பு, 6.5 இன்ச்  ஐபிஎஸ் எல்சிடி திரை ஸ்மார்ட்ஃபோன் எழிலுக்கு இன்னும் மெருகேற்றும்.  இந்த ஆல்-இன்-ஒன் ஸ்மார்ட்ஃபோனிலுள்ள 4ஜி ராம், யுஎன்ஐஎஸ்ஓசி டி606 ஆக்டா கோர் புராசஸர், 64ஜிபி சேமிப்பு,  5000 எம்ஏஹெச் மின்கலன் ஆகியவை வலுவான ‘ஹட்கே’ செயல்பாட்டை உறுதிப்படுத்தும்.

மோடோ இ13 ஸ்மார்ட்ஃபோன் பல்வகைப் பரிமாண ஆடியோ-விஷுவல் அனுபவத்தை டால்பி அட்மோஸ் ஆடியோ மூலம் வழங்கும்.   ட்யூயல் பேண்ட் வை-ஃபை (5ஜிஹெச்இசட் மற்றும் 2.4 ஜிஹெச்இசட்) வசதியான யுஎஸ்பி டைப்-சி 2.0 கனெக்டர் மற்றும் ப்ளூடூத் 5.0 வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 13 எம்பி ஏஐ ஆற்றல் கொண்ட கேமரா மூலம் மிகத் துல்லியமான நிழற்படங்களை எடுக்கலாம். ஆட்டோ ஸ்மைல் கேப்சர் உள்ளிட்ட நுண்ணறிவு அம்சங்கள் மூலம் 13 எம்பி கேமரா ஃப்ரேமிலுள்ள அனைவரும் புன்னகைப்பதைத் தானாக அறிந்து கொண்டு உடனடியாகப் படமெடுக்கும். ஃபேஸ் பியூடி, போர்ட்ரைட் மோட் உள்ளிட்ட ஏனைய அம்சங்கள் உங்கள் நிழற்படங்களைத் தானியாக மேம்படுத்துவதால், அழகான காட்சிகளுக்கு உத்தரவாதம். 5எம்பி ஃப்ரண்ட் கேமரா நீங்களே வியக்கும் அற்புதமான செல்ஃபிக்களை எடுக்கும்.

சம்மந்தப்பட்ட பிரிவில் முதன் முறையாக உள்ள ஐபி52 தண்ணீர் பாதுகாப்பு வடிவமைப்பு காரணமாகத், தண்ணீர் துளி தெறித்தாலும்,  கசிந்தாலும், எந்த பாதிப்புக் ஏற்படாது. 8.47 மிமி மெல்லிதாகவும், 179,.5 கி எடையோடும் வரும் மோடோ இ13, மின்கால ஆயுளுக்கும், தோற்றத்துக்கும் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல், உங்கள் சட்டைப் பாக்கெடுக்குள் மிகச் சரியாகப் பொருந்தும். சாப் சாப் ஃப்ளாஷ்லைட்டை எரிய வைக்க ஸ்மார்ட்ஃபோனை அசைத்தல், கேமராவுக்கு டபிள் ட்விஸ்ட், 10 வாட் சார்ஜர் மற்றும் மேம்பட்ட மற்றும் வேகமான தரவுகளுக்கு 2x2 எம்ஐஎம்ஓ ஆகியவை கூடுதல் சிறப்பம்சங்கள். ஸ்மார்ட்ஃபோனில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் மோடோ இ13 ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும்.

மோடோ இ13, காங்கிரி மற்றும் குவி ஆகிய அழிவிலிருக்கும் இந்திய மொழிகளுக்கு ஆதரவளிக்கும் ஸ்மார்ட்ஃபோன் என்பதைப் பெருமிதத்துடன் நிறுவனம் அறிவிக்கிறது. காங்கிரி மற்றும் குவி ஆகிய இரு மொழிகளும் அழிவு நிலையிலுள்ள உள்ளூர் மொழிகளை டிஜிடல் மயமாக்கும் நிறுவன முனைவின் மூன்றாம் கட்டமாகும். மோடோ இ13 ஸ்மார்ட்ஃபோனில் புதிய மொழிகள் கிடைக்கும். ஆண்ட்ராயிட் 13க்கு நிகழ்நிலைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு மோடோரோலா ஸ்மார்ட்ஃபோனிலும் காங்கிரி மொழியும், குவி விசைப்பலைகையும் உண்டு என மோடோ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form