எச்டிஎஃப்சி வங்கி பரிவர்தன் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் மதுரையில் 5 ஸ்மார்ட் வகுப்புகளை திறந்து வைத்தது

 


எச்டிஎஃப்சி வங்கி ஐந்து நவீன (ஸ்மார்ட்) பள்ளிகளை, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி  சசிதர் ஜெகதீசன்  ஆகியோர் தொடங்கி வைத்தனர்.வங்கியின் சமூக வளர்ச்சி முயற்சியான பரிவர்தனின் கீழ் இதுபோன்ற பணிகளை மொத்தம் 24 பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 22,000 மாணவர்கள் பயனடைவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. 

கூடுதலாக, வங்கியானது தமிழ்நாட்டின்  நிலையான வாழ்வாதார முன் முயற்சியாக கீழ் 8 லட்சம் கடனாக கொடுக்க உள்ளது. இந்த விழாவில் மதுரை திரு.வி.க. மேல்நிலைப் பள்ளி உட்பட முதல் ஐந்து நவீன ஸ்மார்ட் வகுப்பறைகளை டாக்டர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் இணைந்து திங்கள் கிழமை அன்று திறந்து வைத்தனர்.

இந்த நவீன பள்ளி வகுப்பறைகளில் நவீன இன்டராக்டிவ் பேனல்கள், மாணவர்களுக்கான மேசை மற்றும் நாற்காலிகள், வகுப்பறைகளை அழகுபடுத்துதல், பழுதுபார்த்தல் மற்றும் வெள்ளை அடித்தல், உள்கட்டமைப்பை பழுது பார்த்தல், புதுப்பித்தல் மற்றும் அறிவியல் ஆய்வகத்தை மேம்படுத்துதல், மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளை சீரமைப்புச்   செய்தல், சுகாதாரமான தரத்துடன் கூடிய குடிநீர் வழங்குதல், புத்தகங்கள் மற்றும் உள்கட்டமைப்புடன் கூடிய நூலகத்தை மேம்படுத்துதல் என்னும் கூறுகளைக் கொண்டுள்ளது.

 எச்டிஎஃப்சி வங்கி அதன் நிலையான வாழ்வாதார முன் முயற்சி (எஸ்எல்ஐ) மூலம் 8 லட்சம் பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளது. எஸ்எல்ஐ என்பது முறையான வங்கிச் சேவைகளை அணுக முடியாத சமூகப் பிரிவினருக்கு நிதி உதவியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முழுமையான அணுகு முறையாகும். இது அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், குடும்பங்கள் வறுமையிலிருந்து மீள உதவும். இந்த சாதனையை நினைவுக் கூறும்  வகையில், டாக்டர் தியாகராஜன் மற்றும்  ஜெகதீசன் ஆகியோர் 7 எஸ்எச்ஜிகள் மற்றும் ஜேஎல்ஜி-களுக்கு காசோலைகளை வழங்கினர்.

விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், மதுரையில் 5 பள்ளிகளுக்கு பெரும் தொகையில் நவீன வகுப்பறை கட்டி கொடுத்துள்ள எச்டிஎப்சி வங்கி நிர்வாக இயக்குனர் சசிதர் ஜெகதீசன் மற்றும்  நிர்வாகிகளை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  எச்டிஎப்சி வங்கி, இரண்டு, மூன்று மாதங்களிலேயே பள்ளிகளின் தேவை அறிந்து, அந்தந்த பள்ளிக்கு தேவையானதைச் செய்து கொடுத்துள்ளதுடன், இதுவரை இல்லாத தொழில்நுட்பத்தை, வாய்ப்புகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிப்பதில் துரிதமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டுள்ளார்கள். அதற்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், என்றார்.

“பரிவர்தன், நமது சிஎஸ்ஆர் திட்டமானது, சமூகத்தில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்த ஒரு முன் உதாரணமாக செயல்படுகிறது. தரமான கல்வியை அதிகமான மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்வது இந்த முயற்சியின் ஒரு பகுதியாகும், மேலும் இந்த முயற்சியில் தமிழக அரசுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஒ  சஷிதர் ஜெகதீசன் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form