எச்டிஎஃப்சி வங்கி, தனது அதிநவீன 'பேங்க் ஆன் வீல்ஸ்' வேனை மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்தது. இதன் மூலம் வங்கி இல்லாத மற்றும் வங்கி எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் வங்கி சேவைகளை வழங்கும். விருதுநகர் வியாபாரிகள் சங்கத்தில் நடைபெற்ற விழாவில், எச்டிஎஃப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சசிதர் ஜகதீஷன் வேனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மூத்த செயல் துணைத் தலைவர் மற்றும் கிராமப்புற வங்கித் தலைவர் அனில் பவ்னானி, மற்றும் தெற்கு கிளை வங்கித் தலைவர் சஞ்சீவ் குமார் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வங்கியின் முன்முயற்சியான கிராமப்புற வங்கி சேவையான “பேங்க் ஆன் வீல்ஸ்” வேன் ஒவ்வொரு வாரமும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 10 முதல் 25 கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்குச் செல்லும். இது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று 21 வகையான வங்கி தயாரிப்பு மற்றும் சேவைகளை வழங்கும்.குஜராத், மஹாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து இந்த சேவை 5வதாக தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
”பேங்க் ஆன் வீல்ஸ்” வேனின் மூலம் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கு, விவசாயிகள் கணக்கு, நடப்பு கணக்கு, நிலையான வைப்பு கணக்கு, கிசான் கோல்டு கார்டு, தங்க கடன், டிராக்டர் கடன், கார் கடன், இரு சக்கர வாகன கடன், வீட்டுக் கடன், துகந்தார் எக்ஸ்பிரஸ் ஓவர்டிராஃப்ட் தயாரிப்புகளையும் பணம் எடுத்தல், பணம் வைப்பு, செக் டெபாசிட், வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தல், கணக்கு நியமணம், வங்கி கேள்விகள், மொபைல் பேங்கிங், யுபிஐ உடனான டிஜிட்டல் பேங்கிங், நிதியறிவு மற்றும் ஜிஒஐ-யின் சமூக பாதுகாப்பு திட்டம் ஆகிய சேவைகளை வழங்கும்
நிகழ்ச்சியில் எச்டிஎஃப்சி வங்கியின் மூத்த செயல் துணைத் தலைவர் மற்றும் கிராமப்புற வங்கித் தலைவர், அனில் பவ்னானி பேசுகையில், "இந்த முயற்சியின் மூலம் மக்களின் வீட்டு வாசலுக்கு வங்கிச் சேவையை எடுத்துச் செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் மாவட்டத்தில் குறைந்த வங்கிகள் உள்ள இடங்களில் வங்கிச் சேவையை மேம்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 'பேங்க் ஆன் வீல்ஸ்' வேனில் எங்கள் வங்கி ஊழியர்களைக் கொண்டு, பண வைப்பு இயந்திரம், ஏடிஎம் சேவைகள் மற்றும் கிராமப்புற வங்கி வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக தயாரிப்புகள் என பல வங்கிச் சேவைகளை வழங்கும். மேலும் பல மாநிலங்களிலும் இந்த முயற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.