விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் டாடா கேபிடல் ஜல் ஆதார் திட்டம் அறிமுகம்

 



டாடா குழுமத்தில் உள்ள நிதிச்சேவைகள் பிரிவான டாடா கேபிடல்ஆனது தமிழ்நாடு , மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நீர்நிலை மேம்பாட்டு முயற்சியான ஜல்ஆதார் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பாசனத்திற்கு நீர் வழங்குவதையும், நிலத்தடி நீர்வளத்தை அதிகரிப்பதன் மூலமாக சுத்தமான பாதுகாப்பான நீரைப் பெறுவதையும், நீர் பயன்பாட்டில் செயல்திறனை அதிகரிப்பதையும் விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கான வருமானத்தை அதிகரிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜல்ஆதார் திட்டம் மூலம் சமூக உரிமைப்பாடு, திட்ட நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக நீர்நிலைக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. செயல்பாடுகளை மேற்கொள்ளும் கூட்டு செயல்பாட்டு நிறுவனம் மூலமாக நீர்நிலை மேலாண்மையில் கிராமத்தினருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பணி சமத்துவம், பகுதி நேர ஊதியப் பங்களிப்பு, திட்டத்திற்குப் பிந்தைய பராமரிப்புகளுக்காக நீர்நிலைக் குழுவால் நிர்வகிக்கப்பட்டு ஒரு தொண்டு நிறுவனம் மூலமாகத் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வரும் 50:50 நிலையான நிதி ஆகியவற்றில் அவர்களது ஈடுபாடு உருவாக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளைப் புதுப்பித்து புத்துயிர் அளிப்பதன் மூலமாக நீர்நிலைகளில் நீரின் அளவை உயர்த்துவது, நிலத்தடி நீர்மட்ட அளவை 1 முதல் 2 மீட்டர் அளவுக்கு அதிகரித்து அப்பகுதிகளை வளமாக்குவது என்று தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள 22 கிராமங்களுக்கு உதவியுள்ளது டாடா கேபிடலின்  ஜல்ஆதார்  திட்டம். ஒரு நிலையான விவசாய முறையை இப்பகுதிகளில் விவசாயிகள் பயன்படுத்தியதால் நீண்டகாலமாக நீரைப் பயன்படுத்துவதற்கான வழி வகுக்கப்பட்டு, அந்த இடங்களில் நீர் பற்றாக்குறை கட்டுக்குள் வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலமாக, அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 6,000 ஹெக்டேர் நிலத்தை மீட்டெடுக்கும்  ஜல்ஆதார் திட்டமிட்டுள்ளது.

2016 - 17 முதல் தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் ஜல்ஆதார் திட்டம் மூலம் 6,000 ஹெக்டேர் நிலம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 22 கிராமங்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன; 15,000க்கும் மேற்பட்ட விவசாயிகளை இத்திட்டத்தின் பலன்கள் சென்றடைந்துள்ளது. 4,100 லட்சம் லிட்டர்கள் நீர் சேகரிப்புத்திறன் உருவாக்கப்பட்டுள்ளது. பயிர் பல்வகைப்படுத்தல் காரணமாக விவசாயிகளின் வருமானத்தில் பயிர் சராசரி ரூ.19,000 அதிகரித்துள்ளது, என்று டாடா கேபிடலின் சிஎஸ்ஆர் பிரிவு மூத்த துணைத் தலைவர் ஸ்ரீதர் சாரதி தெரிவித்துள்ளார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form