இந்தியாவின் முதன்மையான திறன் பயிற்சி நிறுவனமான மணிப்பால் குளோபல் ஸ்கில்ஸ் அகாடமி-ஆனது, நேஷனல் சேல்ஸ் அகாடமி-யைத் தொடங்கி, அதன் புதிய திட்டங்களின் கீழ் விற்பனைப் பதவிகளில் வேலைக்கமர்த்தவல்ல திறமையான நிபுணர்களை உருவாக்கி இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. இத்திட்டத்தின் மூலம், மணிப்பால் குளோபல் ஸ்கில்ஸ் அகாடமி, அதன் கூட்டாளர் பிஎஃப்எஸ்ஐ, ஃபார்மாசூட்டிகல் மற்றும் கன்ஸ்யூமர் பேக்கேஜ்டு குட்ஸ் நிறுவனத்திற்கு, அவர்களின் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் மேலாண்மை குழுக்களை வலுப்படுத்த தேவைப்படும் சான்றளிக்கப்பட்ட நிபுணர்களை வேலைக்கமர்த்த எற்பாடு செய்யும்.
நேஷனல் சேல்ஸ் அகாடமி ஆனது, என்எஸ்ஏ எக்ஸலென்ஸ் மற்றும் என்எஸ்ஏ அட்வான்ஸ்டு ஆகிய இரண்டு தொழில்முறை சான்றிதழ் மாடூல்-களைக் கொண்டுள்ளது. என்எஸ்ஏ எக்ஸலென்ஸ் என்பது ஒரு குறுகிய கால பாடமாகும் (15 நாட்கள்), மற்றும் என்எஸ்ஏ அட்வான்ஸ்டு என்பது இரண்டு மாத கால ஆன்லைன் திட்டமாகும். இப்படிப்பின் முடிவில், கற்பவருக்கு மணிபால் குளோபல் ஸ்கில்ஸ் அகாடமி சான்றிதழுடன் சான்றளிக்கப்படுவார். படிப்பு முடித்த பிறகு, கற்றவர்கள் சேல்ஸ் அசோசியேட்ஸ், அசிஸ்டண்ட் மேனேஜர்ஸ், ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ், சேல்ஸ் லீட்ஸ் மற்றும் பல இது போன்ற இலாபகரமான பதவிகளில் சேர விரும்பலாம். சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர்ஸ், ரீஜனல் சேல்ஸ் லீட், சேல்ஸ் லீடர்ஸ், சீனியர் பிஸினஸ் மேனேஜர்ஸ் மற்றும் பல இது போன்ற மூத்த பதவிகளுக்கான வளர்ச்சிப் பாதையைத் தேடும் தற்போதைய விற்பனை வல்லுநர்களுக்கு ஆதரவளிக்க மேம்பட்ட சான்றிதழ் முறை வழங்கப்படுகிறது.
இந்த கூட்டுஒத்துழைப்பு குறித்து கருத்து தெரிவித்த ராபின் பௌமிக், மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்-இன் தலைமை வணிக அதிகாரி, "நேஷனல் சேல்ஸ் அகாடமி மூலம், இந்திய வெகுஜன சந்தையில் மூலதனச் சந்தைகள், வர்த்தகம், பத்திரங்கள் மற்றும்வெல்த் கிரியேஷன் ஆகிய அனைத்திலும் திறமையான மனித வளத்தை கையகப்படுத்துதலுடன் மென்மேலும் அதிகரிக்கக்கூடிய வளர்ச்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களின் சான்றளிக்கப்பட்ட விற்பனை வல்லுநர்கள்,பிஎஃப்எஸ்ஐ, ஃபார்மாசூட்டிகல்ஸ், சிபிஜி, எஃப்எம்சிஜி, ரீடெய்ல் மற்றும் பலவற்றில் வணிக வாய்ப்புகளை அதிகரிக்கவும் வளர்ச்சியடையவும் சரியான உபாயங்கள் மற்றும் திறன்களைக் கொண்டிருப்பர்” என்றார்.