கோர்ட்யார்ட் பை மேரியட் திருச்சியில் கேக் மிக்ஸிங் நிகழ்ச்சிகோர்ட்யார்ட் பை மேரியட் திருச்சிராப்பள்ளி கிறிஸ்துமஸ் பண்டிகை கால துவக்கத்தை பாரம்பரியமான கேக் மிக்சிங் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திருச்சியின் உணவுப் பிரியர்கள், இன்ஃபிளுயன்சர்கள் மற்றும் ஹோட்டலின் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சிறந்த உரையாடல்கள் மற்றும் நல்ல வேடிக்கைகள் நிறைந்த இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் விருந்தினர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.பிரீமியம் மதுபானங்கள், சிரப்புகள் மற்றும் உலர் பழங்களின் சிறந்த கலவையை எக்ஸிகியூட்டிவ் செஃப் பிரபாகர் மற்றும் அவரது குழுவினர் தலைமையில் மிக்ஸிங் செய்தனர்

கேக் மிக்ஸிங் நிகழ்வுகள் நிச்சயமாக மக்களை ஒன்றிணைப்பதற்கும் கிறிஸ்துமஸ் பருவத்தை வரவேற்கவும் ஒரு சிறந்த வழியாகும். வரவிருக்கும் இந்த பண்டிகை காலத்திற்கும் மற்றும் திருச்சியில் உள்ள எங்கள்  விருந்தினர்களுக்காக நாங்கள் திட்டமிட்டுள்ள பல புதிய அனுபவங்களையும் அவர்களுக்கு வழங்க ஆவலுடன் இருக்கிறோம்," என்று கோர்ட்யார்ட் பை மேரியட் திருச்சிராப்பள்ளியின்  பொது மேலாளர் வேணுகோபால் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form