விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங் நிறுவனத்தின் முன்னணி பிராண்டான சந்தூர், அதன் கிளாஸிக் சந்தனம் மற்றும் மஞ்சள் சோப்பான, சந்தூர் ஆரஞ்சு சோப்பினை மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. “இளமையாக சிந்தியுங்கள்” என்கிற ஒரு புதுப்பிக்கப்பட்ட மற்றும் புத்துணர்வுமிக்க அணுகுமுறையுடன் இளம் நுகர்வோருடன் ஒரு பிணைப்பினை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மறுஅறிமுக முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், புத்துப்பிக்கப்பட்ட இந்த தயாரிப்பு புதிய பேக்கில், மேம்படுத்தப்பட்ட நறுமணம், மற்றும் சிறப்பாக ஈரப்பதமளிக்கும் தன்மையுடன் வருகிறது. சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் நற்குணத்தின் நறுமணம் மற்றும் இளமையாக தோற்றமளிக்கும் சருமத்தை வழங்கும் வாக்குறுதியுமே சந்தூரின் சிறப்பம்சம் ஆகும். சருமத்திற்கு இயற்கையாக அதிக ஈரப்பதம் தரும் பலன்களுடன், இத்தயாரிப்பு குளிக்கும் போது ஒரு மேன்மையான அனுபவத்தையும், குளித்த பின்பு பிரகாசமான மற்றும் ஈரப்பதமிக்க சருமத்தையும் தருகிறது.
ஒரு தைரியமான மாற்றத்தினைக் குறிக்கும், “இளமையாக சிந்தியுங்கள்” என்கிற இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம் ஒரு பெண்ணின் அடையாளமாகக் கருதும் வழக்கமான பழைய சிந்தனைகளையும், காலாவதியாகி நீடித்துவரும் தவறான புரிதல்களையும் தகர்க்கும் நோக்கத்தினை வெளிப்படுத்துகிறது. இன்றைய சந்தூர் பெண்கள் எல்லைகளால் முடங்காமல், வாழ்க்கையை இளமையான மற்றும் புதுமையான சிந்தனையுடன் எதிர்கொள்கிறார்கள், புதிய சிந்தனைக்கு பெண்களை ஆம் என்று சொல்ல வலியுறுத்துகிறார்கள். ஒரு பெண்ணின் அற்புதமான பயணத்தில் அவளது குழந்தையும் ஒரு பகுதி தான், தனது தாயை உற்சாகப்படுத்தி, அவளது சாதனைகளை கூடவே இருந்து அந்த குழந்தை காணட்டும், என்று சந்தூர் பெண்கள் உணர்வுபூர்வமாக வெளிபடுத்துகிறார்கள். புதிய அண்ட் மேம்படுத்தப்பட்ட சந்தூர், பொது வர்த்தகக் கடைகள் மற்றும் நவீன விற்பனை ஸ்டோர்கள் மற்றும் இணையவழி விற்பனைத் தளங்கள் ஆகியவற்றில் 100 கிராம் விலை ரூ.36/- க்கு கிடைக்கும்.
விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங் நிறுவனத்தின், இந்தியா மற்றும் எஸ்எஎஆர்சி பிஸ்னஸ், கன்ஸ்யூமர் கேர் பிரிவின், தலைமை நிர்வாகி நீரஜ் கட்ரி பேசுகையில், “ அடுத்தகட்ட வளர்ச்சிக்கான எங்களது யுக்தியின் ஒரு பகுதியாக, புதிய தலைமுறை நுகர்வோரின் மாறிவரும் தேவைகளுக்கு இணையாக சந்தூர் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. கசந்தூரின் இந்த புதிய வெளியீடு, சந்தையில் எங்களுக்கென இருக்கும் உயர்ந்த இடத்திற்கு வலுவூட்டுவதோடு, எங்களது வளர்ச்சியையும் விரைவுபடுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று கூறினார்.