இந்திய ஏற்றுமதியாளார்களுக்கு அமேசானின் லாஜிஸ்டிக் தீர்வு



அமேசான் நிறுவனம் அதன் உலகளாவிய விற்பனைத் திட்டமான ‘குளோபல் செல்லிங் புரோகிராமில்’ உள்ள இந்திய ஏற்றுமதியாளர்கள் - உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மில்லியன் கணக்கான ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புகளை ஆண்டுதோறும் நிகழும் பிளாக் ஃபிரைடே மற்றும் சைபர் மண்டே விற்பனையின் போது காட்சிப்படுத்த தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.


வரும் நவம்பர் 24 வியாழன் அன்று தொடங்கி நவம்பர் 28 திங்கள் அன்று முடிவடையும் இந்த விற்பனைக்கு, இந்திய ஏற்றுமதியாளர்கள் அமேசானின் உலகளாவிய வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களால் விற்பனைக்குக் கொண்டுவரப்படவுள்ள வீடு மற்றும் சமையலறை பொருட்கள், ஸ்டெம் பொம்மைகள், ஆடைகள், உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, அலுவலகப் பொருட்கள், நகைகள், அழகு மற்றும் ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளை உலகெங்கிலும் உள்ள அமேசான் வாடிக்கையாளர்கள் பார்வையிட்டு, விருப்பத்திற்கேற்ப வாங்கி மகிழலாம்.

வரவிருக்கும் விடுமுறைக் காலத்தில் இணையவழி ஏற்றுமதியைப் பயன்படுத்தி, அதிக விற்பனையாளர்கள் உலகளவில் தயாரிப்புகளை விற்பதற்கு உதவும் நோக்கில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சர்வதேச கப்பல் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான தளவாடத் தீர்வான செண்ட் என்கிற சேவையை அமேசான் அறிமுகம் செய்துள்ளது. அமேசான் தனது குளோபல் செல்லிங் திட்டத்தில் சேரும் புதிய ஏற்றுமதியாளர்களுக்கான சந்தா கட்டணத்தை முதல் மூன்று மாதங்களுக்கு $120* (மாதம் 39.99) டாலரிலிருந்து வெறும் $1 ஆகக் குறைத்துள்ளது. நவம்பர் 7 2022 மற்றும் மே 6 2023-க்கு காலகட்டத்தில், குளோபல் செல்லிங் திட்டத்தில் சேரும் ஏற்றுமதியாளர்களுக்கு இந்த குறிப்பிட்ட கால சலுகை கிடைக்கும், என்று அமேசான் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form