மெய்சிலிர்க்க வைக்கும் ஓநாய் படம் நவம்பர் 25ல் ரீலிஸ்

ரசிகர்களின் காத்திருப்பு முடியும் தருணமிது! மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், அமர் கெளஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் 'பெடியா' (ஓநாய்) திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் ப்ரி-ரிலீஸ் புரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைக்கும் வகையில் இது அமைந்துள்ளது. 

பெடியா திரைப்படத்தை நவம்பர் 25 அன்று தமிழகமெங்கும் பிரமாண்டமான முறையில் தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 

படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வைரல் ஆகியுள்ள நிலையில், பெடியாவின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. படக்குழுவினரிடம்  இருந்து இன்னும் அப்டேட்டுகளை  ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதால், அவர்களை உற்சாகப்படுத்த பேடியாவின் வெளியீட்டிற்கு முந்தைய காணொலி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

‘தி பெடியா லெஜண்ட்: ப்ரி-ரிலீஸ் ப்ரோமோ’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த காணொலி, ஓநாய் மனிதன் பற்றிய புதுமையான கதையை விவரித்து நம்மை கவர்கிறது. 

பழங்கால அருணாச்சலி நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சாதாரண மனிதரான பாஸ்கரின் கதையை பெடியா சொல்கிறது, புராண காலத்து விலங்கு ஒன்று கடித்ததால் ஓநாயாக அவர் மாறத் தொடங்குகிறார்.

இந்த சாபத்திலிருந்து பாஸ்கர் தப்பித்தாரா, இல்லை அவருக்குள் புகுந்த அசுரன் வென்றானா, அடுத்து என்ன நடக்கும், போன்ற 
சிலிர்க்க வைக்கும் கேள்விகளை காணொலி எழுப்புகிறது.

திரையரங்குகளில் பார்வையாளர்கள் திகில் கலந்த பரவசம் அடையப்போவதை இந்த பரபரப்பான ப்ரி-ரிலீஸ் புரோமோ உறுதிப்படுத்துகிறது. 

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள 'பெடியா' நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஸ்டுடியோ கிரீன் வெளியிட உள்ளது. 

Post a Comment

Previous Post Next Post

Contact Form