இந்திய பேன் துறையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவதில் முன்னோடியாகத் திகழும் ஹேவல்ஸ் இந்தியா, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தலைமுறை சீலிங் பேன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறந்த செயல்திறன், மின்சார சேமிப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்தப் புதிய பேன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் முதல் சூப்பர் ஹை-ஸ்பீட் பில்டிசி+ பேன், டூயல் கண்ட்ரோல் வசதி கொண்ட சைலண்ட் ஏர் மேக்ஸ் பில்டிசி+ பேன்கள் மற்றும் இந்தியாவின் முதல் ஏஜென்டிக் ஏஐ பேன் ஆகிய மூன்று முக்கியப் புதுமைகள் இடம்பெற்றுள்ளன.
கடந்த பல ஆண்டுகளக, இந்திய சீலிங் பேன் சந்தையில் அதிக மின்சாரத்தைச் செலவழித்தாலும், அதிக வேகம் மற்றும் காற்றை வழங்கக்கூடிய 'இன்டக்ஷன்' பேன்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. மறுபுறம், பில்டிசி பேன்கள் அதிக மின்சாரத்தைச் சேமிப்பதாகவும், ஸ்மார்ட் வசதிகள் கொண்டதாகவும் இருந்தாலும், அவற்றின் வேகம் மற்றும் காற்றின் அளவு குறைவாக இருக்கும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்தது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், அதிக வேகத்தையும் மின்சார சேமிப்புத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து பில்டிசி பேன் பிரிவை ஹேவல்ஸ் மறுவடிவமைப்பு செய்துள்ளது.
இந்தப் புதிய வரிசையில் முதன்மையாக இருப்பது இந்தியாவின் முதல் சூப்பர் ஹை-ஸ்பீட் பில்டிசி+ பேன் ஆகும். சாதாரண பில்டிசி பேன்களை விட அதிக செயல்திறன் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 385 RPM வேகம் கொண்ட 'சூப்பர் ஹை-ஸ்பீட்' 6-வது நிலையும், 400 RPM வேகம் கொண்ட 'அல்ட்ரா பூஸ்ட்' 7-வது நிலையும் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்ததாக, காற்றின் வேகத்தில் எந்த சமரசமும் இல்லாமல், வீட்டில் அமைதியான சூழலை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்தியாவின் முதல் சைலண்ட் ஏர் மேக்ஸ் பில்டிசி+ சீலிங் பேன்களை ஹேவல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், 'எபிக் சிக்னியா ஸ்மார்ட் பேன்' மூலம் இந்தியாவின் முதல் ஏஜென்டிக் ஏஐ பேனையும் ஹேவல்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட சில கட்டளைகளுக்கு மட்டுமே பதிலளிக்கும் சாதாரண வாய்ஸ்-கண்ட்ரோல் சாதனங்களைப் போலல்லாமல், இந்த ஏஜென்டிக் ஏஐ பேன் இயல்பான பேச்சுக்களைப் புரிந்துகொண்டு பயனர்களின் தேவைக்கேற்பச் செயல்படும் திறன் கொண்டது. வாடிக்கையாளர்கள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் குஜராத்தி உட்பட 10-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் இந்த பேனுடன் சாதாரணமாகப் பேசி இயக்க முடியும். இதிலும் 65 சதவீதம் வரை மின்சார சேமிப்பு, ரிவர்ஸ் ரொட்டேஷன், பூஸ்ட் மோட், பிரீஸ், மாப் மோட், ஸ்லீப் மோட் மற்றும் 5-ஸ்டார் ரேட்டிங் ஆகிய வசதிகள் உள்ளன.
இந்த அறிமுகம் குறித்து ஹேவல்ஸ் பேன்ஸ் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் குல்பூஷன் பரத்வாஜ் கூறுகையில், "ஹேவல்ஸின் பயணத்தில் புதுமைகள் எப்போதும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயனுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் உண்மையான தேவைகளைத் தீர்க்கும் எங்கள் முயற்சியின் வெளிப்பாடே இந்தப் புதிய பேன்கள். பில்டிசி பேன்களின் வேகம் குறித்த தவறான எண்ணத்தை மாற்றுவதாக இருந்தாலும் சரி, ரிமோட் மற்றும் ரெகுலேட்டர் வசதியுடன் சத்தமில்லாத சௌகரியத்தைத் தருவதாக இருந்தாலும் சரி, அல்லது பேசும் மொழியைப் புரிந்துகொள்ளும் ஏஐ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதாக இருந்தாலும் சரி, இந்திய பேன் துறையின் அடுத்தகட்ட வளர்ச்சியை நாங்கள் வடிவமைத்து வருகிறோம்" என்றார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த பேன்கள் பல்வேறு மாடல்கள், வண்ணங்கள் மற்றும் 1200 மிமீ அளவுகளில் ஹேவல்ஸின் அனைத்து விற்பனை நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும்.
