உடல் பருமனை ஒரு நாள்பட்ட நோயாக அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தை திருச்சிராப்பள்ளி நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்


உடல் பருமனை நீண்டகால மேலாண்மை மற்றும் ஆதரவு தேவைப்படும் ஒரு நாள்பட்ட, சிக்கலான நோயாக அதிகளவில் அங்கீகரிக்க வேண்டும் என்று திருச்சிராப்பள்ளியில் உள்ள சுகாதார நிபுணர்கள் அழைப்பு விடுக்கின்றனர். இந்தியாவில் உடல் பருமன் ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார சவாலாக இருந்தபோதிலும், மற்ற நாள்பட்ட நோய்களுடன் ஒப்பிடும்போது இது தொடர்ந்து குறைவாகவே கண்டறியப்பட்டு, குறைவாகவே சிகிச்சையளிக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளியில் ஒரு பரந்த அளவிலான இதய-வளர்சிதை மாற்ற (கார்டியோமெட்டபாலிக்) சுகாதாரச் சுமை இருப்பதை மாவட்ட அளவிலான சுகாதார குறியீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. 15-49 வயதுடைய பெண்களில் 46.2% பேர் அதிக எடை அல்லது உடல் பருமனுடன் (BMI ≥25.0 kg/m²) உள்ளனர், அதே நேரத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் 26.2% பேருக்கும், ஆண்களில் 26.8% பேருக்கும் அதிக அல்லது மிக அதிக இரத்த சர்க்கரை அளவு (>140 mg/dl) உள்ளது அல்லது இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த மருந்து எடுத்துக்கொள்கிறார்கள்.2 பெண்களில் 24.1% பேருக்கும், ஆண்களில் 26.4% பேருக்கும் அதிக இரத்த அழுத்தம் (சிஸ்டாலிக் ≥140 mm Hg மற்றும்/அல்லது டயஸ்டாலிக் ≥90 mm Hg) அல்லது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த மருந்து பயன்படுத்துவது பதிவாகியுள்ளது.

 இந்த குறியீடுகள் அனைத்தும் இப்பகுதியில் உள்ள இதய-வளர்சிதை மாற்ற அபாயத்தின் குறிப்பிடத்தக்க சுமையையும், உடல் பருமனை ஒரு நாள்பட்ட நோயாக அங்கீகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது பல தீவிரமான உடல்நலச் சிக்கல்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், அதிக விழிப்புணர்வு, முன்கூட்டியே நோய் கண்டறிதல் மற்றும் ஆதார அடிப்படையிலான சிகிச்சை மற்றும் ஆதரவை சரியான நேரத்தில் பெறுவதற்கு நிபுணர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.

டாக்டர் M. சண்முகவேலு, MD சிறப்பு மருத்துவர் (பொது மருத்துவம்) & நீரிழிவு சிகிச்சைத் தலைவர், திருச்சி நீரிழிவு சிறப்பு மையம் அவர்கள்: “உடல் பருமன் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் விரிவானதாக இருக்கும்போது, பலர் இன்னும் உடல் பருமனை எடையின் அடிப்படையில் மட்டுமே பார்க்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் முன்னணி மருத்துவ அமைப்புகள் உடல் பருமனை உயிரியல், மரபணு, சுற்றுச்சூழல் மற்றும் வளர்சிதை மாற்ற காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு நாள்பட்ட, சிக்கலான நோயாக அங்கீகரிக்கின்றன. இந்த நோயைப் புரிந்துகொள்வது, பழியைச் சுமத்துவதிலிருந்து சிறந்த சிகிச்சையை நோக்கி உரையாடலை மாற்ற உதவும்” என்று கூறினார்.

டாக்டர் D சுரேந்திரன், ஆலோசனை மருத்துவர், நீரிழிவு நோய் நிபுணர் & மருத்துவ இயக்குநர், SVH சிறப்பு மருத்துவமனைகள், திருச்சிராப்பள்ளி: “உடல் பருமன் சிகிச்சை என்பது வெறுமனே எடையைக் குறைப்பது மட்டுமல்ல, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகும். உடல் பருமன் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிவதும், ஒரு நபரின் இதய-வளர்சிதை மாற்ற அபாயத்தைப் புரிந்துகொள்வதும் மிகவும் பொருத்தமான சிகிச்சை முறையை வழிநடத்த உதவும். இந்த மேலாண்மையில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு தலையீடுகள், நடத்தை சார்ந்த ஆதரவு மற்றும் பிற மருத்துவ விருப்பங்கள் அடங்கும்” என்று கூறினார்.

உடல் பருமன் என்பது ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய அதிகப்படியான அல்லது அசாதாரண உடல் கொழுப்பால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட சிக்கலான நோயாகும்4. இது உயிரியல், மரபணு, சுற்றுச்சூழல், சமூக மற்றும் நடத்தை காரணிகள் உள்ளிட்ட ஒன்றோடொன்று இணைந்த பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது.

 உடல் பருமன் என்பது டைப் 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், டிஸ்லிபிடெமியா, கரோனரி இதய நோய் மற்றும் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட சிக்கல்களின் அதிகரித்த அபாயத்துடன் தொடர்புடையது.8 இது குறைந்தது 13 வகையான புற்றுநோய்களின் அதிகரித்த அபாயத்துடனும் தொடர்புடையது.9 உடல் பருமனுடன் வாழும் மக்கள் பெரும்பாலும் உடல் எடை குறித்த அவமானத்தை (ஸ்டிக்மா) எதிர்கொள்கின்றனர், இது சிகிச்சை பெறுவதற்குத் தடைகளை உருவாக்கக்கூடும்.6 விழிப்புணர்வை மேம்படுத்துவதும், தனிநபர்களுக்கும் சுகாதார நிபுணர்களுக்கும் இடையே தகவலறிந்த உரையாடல்களை ஊக்குவிப்பதும் பொருத்தமான சிகிச்சையைப் பெறுவதற்கு உதவும்.

சுகாதார விளைவுகளை மேம்படுத்தவும், உடல் பருமன் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கவும் முன்கூட்டியே நோய் கண்டறிதல் மற்றும் பொருத்தமான மேலாண்மை ஆகியவை முக்கியமானவை. உடல் பருமன் மேலாண்மைக்கு ஒரு விரிவான மற்றும் பல்துறை அணுகுமுறை தேவைப்படுகிறது. அதிக எடை மற்றும் உடல் பருமனுடன் வாழும் மக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கிய மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் ஆதார அடிப்படையிலான சிகிச்சையைப் பெற வேண்டும். ஒரு சுகாதார நிபுணருடனான ஆலோசனை ஒரு தனிநபரின் உடல்நல அபாயங்களை மதிப்பிடுவதற்கும், தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு ஆதரவு, நடத்தை சார்ந்த தலையீடுகள் மற்றும் பிற பொருத்தமான சிகிச்சை முறைகளை உள்ளடக்கிய தனிப்பயனாக்கப்பட்ட மேலாண்மைத் திட்டத்தைத் தீர்மானிப்பதற்கும் உதவும்.

நோய் விழிப்புணர்வை மேம்படுத்தவும், அவமானத்தைக்  குறைக்கவும், சுகாதார நிபுணர்களுடன் சரியான நேரத்தில் தொடர்பு கொள்வதை ஊக்குவிக்கவும் சுகாதாரச் சூழல் அமைப்பு முழுவதும் ஒருங்கிணைந்த முயற்சி தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்தினர். உடல் பருமனை ஒரு நாள்பட்ட நோயாக அதிகளவில் புரிந்துகொள்வது, உடல் பருமனுடன் வாழும் மக்களுக்கு முன்கூட்டியே நோய் கண்டறிதல், பொருத்தமான மேலாண்மை மற்றும் மேம்பட்ட சுகாதார விளைவுகளை ஆதரிக்க உதவும்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form