அலன் கரியர் இன்ஸ்டிட்யூட், மதுரை (தமிழ்நாடு), நீட் யுஜி 2026 மற்றும் ஜேஇஇ 2026 தேர்வுகளில் தனது மாணவர்கள் பெற்ற சிறப்பான கல்விச் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், 2026 நவம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை மதுரையில் அலன் SOPAN -2026 வெற்றி விழா நிகழ்ச்சியை நடத்தியது. மதுரையில் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே அகில இந்திய அளவில் முதல் 1000 இடங்களுக்குள் (AIR) இடம்பெற்று அலன் மதுரை குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளது.
SOPAN - வெற்றி விழா 2026 நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு சிறப்பான தேர்ச்சி பெற்ற அலன் மதுரையின் முன்னாள் மாணவர்களுக்குப் பணப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தது. நீட் யுஜி 2026 தேர்வு முடிவுகளில் முன்னிலை வகித்த மனோஜ் பூபதி, அகில இந்திய அளவில் 923-வது இடத்தைப் (AIR 923) பெற்று சாதனை படைத்தார். மேலும், அலன் மதுரையைச் சேர்ந்த மொத்தம் 29 மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை, ஐஐடி மற்றும் என்ஐடி-களில் 2 மாணவர்களும், ஐஐஐடி-களில் 3 மாணவர்களும், ஐஐஎஸ்இஆர்-களில் 2 மாணவர்களும், பிட்ஸ் மற்றும் ஐஎஸ்ஐ-யில் 2 மாணவர்களும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதி பி. புகழேந்தி பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கினார். அலன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் கல்விப் பிரிவு தலைவர் சந்தோஷ் சிங் மற்றும் அலன் மதுரை மையத் தலைவர் சீனிவாசப்பெருமாள் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்ற ஊக்கமளிக்கும் முதன்மைத் தரவரிசை மாணவர்களின் உரை (Toppers’ Talk) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தங்களது தேர்வுக்கான தயாரிப்பு உத்திகள், தேர்வு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய மனநிலை மற்றும் ஒழுக்கமான படிப்பு முறைகள் குறித்து தற்போதைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், முன்னணி மருத்துவம், பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பயின்று வரும் முன்னாள் மாணவர்கள், அலன் மதுரையில் தங்களது கல்விப் பயணம் மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் தங்களது வெற்றிக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சந்தோஷ் சிங், மதுரை மையம் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே அகில இந்திய அளவில் முதல் 1000 இடங்களுக்குள் மாணவர் ஒருவர் இடம்பிடித்திருப்பது பெருமைக்குரிய சாதனை என்றும், இதற்காக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதில் அலன் கொண்டுள்ள அர்ப்பணிப்பை எடுத்துரைத்த அவர், தொடர்ச்சியான கடின உழைப்பு, மதிப்புகள் சார்ந்த கல்வி மற்றும் கோட்டாவின் நிரூபிக்கப்பட்ட கல்வி கற்பித்தல் முறைகள் ஆகியவை மதுரை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவில் சிறந்து விளங்க உதவுவதாகக் குறிப்பிட்டார்.
அலன் மதுரை மையத் தலைவர் சீனிவாசப்பெருமாள், சிறப்பு விருந்தினரான நீதியரசர் பி. புகழேந்திக்கு நன்றி தெரிவித்ததுடன், அலன் மீது நம்பிக்கை வைத்த பெற்றோர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் அடுத்தடுத்த மாணவர் தலைமுறையினர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வழிகாட்டுவதில் மையம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் உறுதியளித்தார்.
