சந்தையின் பல்வேறு வணிகச் சுழற்சிகளில் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்த பஜாஜ் ஏஎம்சி அறிமுகப்படுத்தும் ‘பஜாஜ் ஃபின்சர்வ் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்’


பஜாஜ் அசெட் மேனேஜ்மென்ட் லிமிடெட், ‘பஜாஜ் ஃபின்சர்வ் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட்’ என்ற புதிய முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. வணிகச் சுழற்சிகளை அடிப்படையாகக் கொண்ட முதலீட்டுக் கருப்பொருளில் செயல்படும் இந்தத் திட்டம், ஒரு திறந்தநிலை பங்குச்சந்தை முதலீட்டுத் திட்டமாகும். வணிகச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் பயனடையக்கூடிய நிறுவனங்களை அடையாளம் காண்பதும், மாறிவரும் வாய்ப்புகளுக்கு ஏற்ப பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களுக்கிடையே முதலீட்டு ஒதுக்கீடுகளை மாற்றியமைப்பதும் இந்த ஃபண்டின் நோக்கமாகும்.இந்த ஃபண்டின் புதிய நிதி வழங்கல் நவம்பர் 20, 2026 அன்று தொடங்கி, டிசம்பர் 4, 2026 அன்று நிறைவடையும். ஃபண்டின் பங்குச்சந்தை முதலீட்டுப் பகுதியை சோர்ப் குப்தா மற்றும் பரத் ஹெக்டே நிர்வகிப்பார்கள். நிலையான வருமான முதலீட்டுப் பகுதியை சித்தார்த் சவுத்ரி நிர்வகிப்பார்.

முதலீட்டு வாய்ப்புகள் ஒரு நிறுவனத்தின் வணிகத் தரத்தை மட்டுமே சார்ந்திருப்பதில்லை; அந்த நிறுவனம் தனது வணிகச் சுழற்சியின் எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதும் முக்கியமானது என்ற புரிதலை இந்த ஃபண்டின் முதலீட்டு அணுகுமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது.இதன்படி, பொருளாதார வளர்ச்சி, வட்டி விகிதங்கள், கடன் நடவடிக்கைகள், நுகர்வு, மூலப்பொருட்கள் மற்றும் பிற கமாடிட்டிகளின் விலைகள், நிறுவனங்களின் வருவாய் மற்றும் மூலதனச் செலவினங்களில் ஏற்படும் மாற்றங்களை ஃபண்ட் ஆய்வு செய்யும். இவற்றுடன் நிறுவனங்களின் மதிப்பீடுகள் மற்றும் முதலீட்டாளர்களின் சந்தை மனநிலையையும் கருத்தில் கொண்டு புதிய முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காண முயலும்.

பஜாஜ் ஃபின்சர்வ் பிசினஸ் சைக்கிள் ஃபண்டின் முதலீட்டு அணுகுமுறை, பரந்த துறைசார் போக்குகளுடன் மட்டும் நின்றுவிடாது. ஒரே துறைக்குள் உள்ள வெவ்வேறு தொழில்கள் தங்களது வணிகச் சுழற்சிகளில் வெவ்வேறு கட்டங்களில் இருக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, அவற்றில் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகளையும் ஃபண்ட் ஆய்வு செய்யும்.

இந்த ஃபண்டின் முதலீட்டுச் செயல்முறையில் பஜாஜ் ஏஎம்சியின் தனித்துவமான முதலீட்டுத் தத்துவமான ‘இன்கியூப்’ பயன்படுத்தப்படும்.இந்த முதலீட்டுத் தத்துவம தகவல் சார்ந்த முன்னிலை ,அளவுசார் பகுப்பாய்வு மூலம் கிடைக்கும் முன்னிலை மற்றும் நடத்தைசார் நுண்ணறிவு மூலம் கிடைக்கும் முன்னிலை என  மூன்று முக்கிய அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த மூன்று அம்சங்களும் வணிகச் சூழல்களை விரிவாக மதிப்பிடுவதற்கும், தரவுகளின் அடிப்படையில் முதலீட்டு முடிவுகளை ஒழுங்குமுறையுடன் மேற்கொள்வதற்கும், முதலீட்டாளர்களின் நடத்தை சார்ந்த முன்சார்பு எண்ணங்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் உதவும்.

இந்தத் திட்டத்தில் ரெகுலர் மற்றும் டைரக்ட் ஆகிய இரண்டு திட்ட வகைகளும் கிடைக்கும். மேலும், வளர்ச்சி மற்றும் வருமானப் பகிர்வு மற்றும் மூலதனத் திரும்பப் பெறுதல் ஆகிய விருப்பங்களும் வழங்கப்படும்.முதலீட்டாளர்களின் வசதிக்காக முறையான முதலீட்டுத் திட்டம் முறையான பணம் திரும்பப் பெறும் திட்டம் மற்றும் முறையான நிதி மாற்றுத் திட்டம் ஆகிய வசதிகளும் கிடைக்கும்.குறைந்தபட்ச ஆரம்ப முதலீட்டுத் தொகை ₹500 ஆகும். கூடுதல் முதலீடுகளை ₹1-ன் மடங்குகளில் மேற்கொள்ளலாம். அடுத்தடுத்த முதலீட்டு விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்சத் தொகை ₹100 ஆகும். அவையும் ₹1-ன் மடங்குகளில் இருக்க வேண்டும்.யூனிட்கள் ஒதுக்கப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அவற்றை மீட்டெடுத்தாலோ அல்லது வேறு திட்டத்திற்கு மாற்றினாலோ, பொருந்தக்கூடிய நிகர சொத்து மதிப்பில் 1 சதவீதம் வெளியேறும் கட்டணம் விதிக்கப்படும். மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளியேறும் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.

ஃபண்ட் அறிமுகம் குறித்து பஜாஜ் ஏஎம்சியின் நிர்வாக இயக்குநர் கணேஷ் மோகன் கூறுகையில், “ பஜாஜ் ஃபின்சர்வ் பிசினஸ் சைக்கிள் ஃபண்ட், வணிகச் சுழற்சிகளைப் புரிந்துகொண்ட ஒழுங்குமுறையான முதலீட்டு உத்தியின் மூலம் மாற்றங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவின் மாறிவரும் வளர்ச்சிப் பயணத்தில் முதலீட்டாளர்கள் பங்கேற்கும் வாய்ப்பை வழங்க விரும்புகிறோம்,” என்றார்.

இதுகுறித்து பஜாஜ் ஏஎம்சியின் தலைமை முதலீட்டு அதிகாரி நிமேஷ் சந்தன் கூறுகையில், “இந்த ஃபண்டின் மூலம், பரந்த பொருளாதார நிலைமைகளை அடிப்படையாகக் கொண்ட டாப்-டவுன் பகுப்பாய்வையும், நிறுவன அளவிலான பாட்டம்-அப் பகுப்பாய்வையும் ஒருங்கிணைப்பதே எங்கள் முயற்சியாகும். இதன் மூலம் எதிர்காலத்தில் வணிகங்கள் மற்றும் துறைகளில் ஏற்படக்கூடிய வளர்ச்சியின் பலன்களைப் பெறும் வகையில் முதலீட்டுத் தொகுப்பை அமைக்க முயல்வோம். பரந்த சந்தையின் கவனத்திற்கு வருவதற்கு முன்பே சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதே எங்கள் நோக்கமாகும்,” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form