டிவிஎஸ் மோட்டோசோல் 6.0 டிசம்பரில் கோவாவில் நடக்கிறது



டிவிஎஸ் வேணு குழுமத்தின் ஒரு அங்கமும், உலகளவில் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது புகழ்பெற்ற முதன்மை மோட்டார் சைக்கிள் திருவிழாவான 'டிவிஎஸ் மோட்டோசோல் 6.0'-ன் ஆறாவது பதிப்பு, வரும் 2026 டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கோவாவில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஆண்டுதோறும் மோட்டார் சைக்கிள் ப்ரியர்களின் திருவிழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் 'டிவிஎஸ் மோட்டோசோல்', வெறும் கொண்டாட்டமாக  மட்டுமல்ல... டிவிஎஸ்-இன் அட்டகாசமான புதிய மாடல்கள், மிரட்டலாக கஸ்டமைஸ் செய்யப்பட்ட பைக்குகள், பிரத்தியேக ரைடிங் கியர்கள் மற்றும் சர்வதேச கூட்டு முயற்சிகளை அறிமுகப்படுத்தும் மாபெரும் தளமாகவும் தொடர்ந்து அசத்தி வருகிறது!

டிவிஎஸ் மோட்டோசோல் என்பது வெறும் பைக்குகளுக்கான களம் மட்டுமல்ல; ரைடர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையும், அவர்களின் பாதுகாப்பையும் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் ஒரு லைஃப்ஸ்டைல் மேடை ஆகும்.  இங்கு  பைக்குகளைக் காட்சிப்படுத்துவதோடு நின்றுவிடாமல், தொழில்முறை கூட்டு முயற்சிகள் மற்றும் ரைடர்களுக்குப் புதிய சாகச அனுபவங்களை வழங்குவதிலும், பைக்கர்களின் சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவதிலும் டிவிஎஸ் மோட்டோசோல் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.

முந்தைய ஆண்டுகளின் அதிரடி வெற்றிகளைத் தொடர்ந்து, இந்த முறையும் கோவாவை அதிர வைக்கத் தயாராகிவிட்டது டிவிஎஸ் மோட்டோசோல் 6.0 இரண்டு நாட்கள் இடைவிடாத உற்சாகம், கண்ணைக் கவரும் சாகசங்கள் என பைக் ரைடர்கள், ட்ராக்கில் பறக்கும் ரேஸர்கள், சோஷியல் மீடியா க்ரியேட்டர்கள், ராக் மியூசிக் கலைஞர்கள் மற்றும் பைக்கிங் ப்ரியர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் மாபெரும் திருவிழாவாக இது அமையவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ஆச்சரியங்களையும், இதுவரை பார்த்திராத புதிய வடிவங்களையும் வழங்கி வரும் மோட்டோசோல், வெறும் பைக்குகளுக்கான திருவிழாவாக மட்டுமே நின்றுவிடாமல்... அசுர செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பம், இளைஞர்களின் துடிப்பான கலாசாரம், கற்பனைத்திறன் மற்றும் நட்பின் சங்கமமாக உருவெடுத்துள்ளது. இன்று டிவிஎஸ் நிறுவனம் முன்னெடுக்கும் நவீனத் தொலைநோக்குப் பார்வையை உலகிற்குப் பறைசாற்றுவதுடன், நாளுக்கு நாள் மெருகேறி வரும் பைக்கிங் மோகத்தையும், அது எதிர்காலத்திற்குக் கொண்டு சேர்க்கும் எல்லையற்ற சாத்தியங்களையும் உற்சாகமாகக் கொண்டாடும் ஒரு மாபெரும் திருவிழாவாக அமையவிருக்கிறது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ப்ரீமியம் பிரிவு வணிகத் தலைவர் விமல் சும்ப்ளி பேசும்போது, “இந்த முறை ‘மோட்டோசோல் 6.0’ மூலமாக இந்த அனுபவத்தை இன்னும் அடுத்த லெவலுக்குக் எடுத்துச் செல்லப் போகிறோம்! மின்னல் வேக ரேஸிங், அசரவைக்கும் தொழில்நுட்பம், சிலிர்க்க வைக்கும் சாகசம், கண்ணைக் கவரும் டிசைன், மிரட்டலான கஸ்டம் பைக்குகள் மற்றும் இளசுகளின் லைஃப்ஸ்டைல் என எல்லாமே ஒரே கூரையின் கீழ் அரங்கேறப்போகிறது. பைக்கர்கள் ஒன்று கூடி, நட்பைப் பாராட்டி, தங்களின் தனித்துவத்தைப் பறைசாற்றி, பைக்கிங்கை ஒரு வாழ்க்கை முறையாகவே கொண்டாடுவதற்கான உச்சக்கட்ட தளம் இது!” என்றார்.

கோவாவின் கடற்கரைக் காற்றில் மீண்டும் மோட்டோசோல் 6.0 திரும்பும் போது, அது வெறும் மோட்டார் சைக்கிள் விழாவாக மட்டும் இருக்கப்போவதில்லை; உலகெங்கிலும் உள்ள பைக் ப்ரியர்களின் ரத்த ஓட்டத்தை ஒன்றிணைத்து, புதிய எல்லைகளைத் தொடும் ஒரு சர்வதேசத் திருவிழாவாக ஒட்டுமொத்த கோவாவையும் அதிர வைக்கும் ஒரு மாபெரும் நிகழ்வாக நடைபெற இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form