உலகளாவிய பிரீமியம் டயர் சந்தையில் தனது இடத்தை வலுப்படுத்த சென்னை ஆலையின் திறனை விரிவாக்கம் செய்கிறது சியட்


சியட் லிமிடெட் நிறுவனம், தனது சென்னை ஆலையில் பயணிகள் கார் மற்றும் எஸ்யுவி, வர்த்தக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன டயர் பிரிவுகளுக்கான உற்பத்தித் திறனை விரிவாக்கம் செய்வதாக  அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கம், இந்திய வாடிக்கையாளர்களுக்கும் ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளுக்கும் மேம்பட்ட, பிரீமியம் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ஆலையின் திறனை வலுப்படுத்துகிறது.

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் முக்கிய தயாரிப்புகளில் '4சீசன்டிரைவ்ப்ளஸ்' ஒன்றாகும். இது மாறுபட்ட வானிலை சூழல்களுக்கு ஏற்ப செயல்படும் வகையில், குறிப்பாக ஈரமான சாலைகளில் சிறந்த பிடிமானத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, ஐரோப்பிய தரத்திலான 'ஆல் சீசன்' (அனைத்து பருவமழை) டயர் திறனை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது.

மேலும், இந்த ஆலை சியட்டின் 'கிராஸ்டிரைவ் ஆர்டி' ரக டயர்களையும் உற்பத்தி செய்கிறது. இது அமெரிக்காவின் கரடுமுரடான மற்றும் ஆஃப்-ரோட் டயர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கரடுமுரடான பாதைக்கான டயர் ஆகும். இந்த தயாரிப்பு கரடுமுரடான பாதைகளில் இயங்கும் திறனை, வழக்கமான சாலை பயன்பாட்டிற்கு தேவையான பன்முகத்தன்மையுடன் இணைப்பதுடன், இந்திய வாடிக்கையாளர்களுக்கான சியட்டின் பிரீமியம் எஸ்யுவி தயாரிப்புகளின் தேர்வை விரிவாக்குகிறது.

சியட் நிறுவனம் 'ஸ்போர்ட்டிரைவ் எஸ்யுவி இசட்ஆர்22' டயருக்கான உற்பத்தித் திறனையும் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 22-இன்ச் டயர்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய டயர் நிறுவனம் என்ற பெருமையை சியட் பெறுகிறது. பெரிய ரிம் கொண்ட, அல்ட்ரா பிரீமியம் எஸ்யுவி பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த வரிசை, 'சியட் காம்' தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன், இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

சியட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அர்னாப் பானர்ஜி கூறுகையில், "இந்தியாவிலும் சர்வதேச சந்தைகளிலும் சியட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சென்னை உற்பத்தி ஆலை ஒரு முக்கியமான அங்கமாகும். இந்த விரிவாக்கப்பட்ட உற்பத்தித் திறன், பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் முழுவதும் மேம்பட்ட நவீன தயாரிப்புகளை உற்பத்தி செய்ய உதவுவதோடு, ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்கா போன்ற சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பிரத்யேக தேவைகளுக்கு ஏற்ப செயல்படவும் வழிவகுக்கிறது. இந்த முதலீடு, இந்தியாவில் உருவாக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் மூலம் பிரீமியம் பிரிவுகளில் போட்டியிடும் நமது திறனை மேலும் வலுப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form