தனிஷ்க்கின் ரிவா இந்தப் பண்டிகை காலத்தில் வெட்டிங் சிக்னேச்சர்ஸ் மூலம் திருமண பாரம்பரியங்களை விமரிசையாகக் கொண்டாடுகிறது!


தனிஷ்க் நிறுவனத்தின் திருமண நகைகளுக்கான பிரத்தியேக துணை பிராண்டான ‘ரிவா பை தனிஷ்க்’, இந்த பண்டிகைக் காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மணப்பெண்களின் வளமான திருமணப் பாரம்பரியங்களைக் கொண்டாடும் நோக்கில், தனது பிரத்தியேக ‘வெட்டிங் சிக்னேச்சர்ஸ்’ நகைத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இரு மாநிலங்களின் கலாச்சாரப் பாரம்பரியத்தினால் ஈர்க்கப்பட்டு, அவற்றை மிளிரச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்தத் தனித்துவமான மணப்பெண் நகை வரிசை, ஒவ்வொரு திருமணப் பண்பாட்டையும் தனித்துவமாக்கும் நேர்த்தியான கைவினைத்திறனையும் பிராந்தியக் கலை நயத்தையும் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தாஜ் ஜெய் மஹால் அரண்மனையில்’, இந்தியாவின் முன்னணி திருமணப் புகைப்படக் கலைஞர் ஜோசப் ராதிக் கேமரா கண்களால் படம்பிடிக்கப்பட்ட இக்கண்கவர் விளம்பரப் பிரச்சாரம், இந்த இரு கலாச்சார மணப்பெண்களின் அழகிய திருமணக் கதைகளுக்கு உயிரூட்டியுள்ளது.

திருமணக் கொண்டாட்டங்கள் என்பது பிரதான முகூர்த்தச் சடங்கைத் தாண்டி, குடும்பங்களை ஒன்றிணைக்கும் பல்வேறு பாரம்பரிய சடங்குகளையும் உள்ளடக்கியதாகும். தமிழ் திருமணங்களில் பந்தக்கால் முகூர்த்தம், நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் போன்ற நிகழ்வுகளும், தெலுங்கு திருமணங்களில் 'பெல்லி கூத்துரு' மற்றும் 'தலம்பிராலு' போன்ற வைபவங்களும் திருமணப் பயணத்தின் முக்கியமான தருணங்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தமிழ் மரபின் நகைத் தொகுப்பானது பாரம்பரியக் கோயில் நகைகளின் நுணுக்கமான கலைத்திறனால் கவர்ந்திழுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தாமரை மலரில் வீற்றிருக்கும் கஜலட்சுமி மற்றும் மயில் வடிவங்கள், நுணுக்கமான நகாஷி வேலைப்பாடுகள், ஸ்டாம்பிங் நுட்பங்கள், நவரத்தினக் கற்கள், கிளாஸ் குந்தன் மற்றும் தூய முத்துக்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கம்பீரமான வடிவமைப்பை அளிக்கின்றன. தெலுங்கு மரபின் நகைத் தொகுப்பானது செவ்வியல் தங்க வடிவங்கள், நுட்பமான கைவினை வேலைப்பாடு மற்றும் செழுமையான ரத்தினப் பதிப்புகளை ஒன்றிணைக்கிறது. லட்சுமி தேவி, மலர் உருவங்கள் மற்றும் இயற்கை எழிலை வெளிப்படுத்தும் வடிவங்களுடன், மாணிக்கம்  மற்றும் மரகதப் பச்சை வண்ணக் கற்கள் நேர்த்தியாகப் பதிக்கப்பட்டு இந்நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு பிராந்திய வடிவமைப்பு முறைகளும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மணப்பெண் ஆபரணப் பாரம்பரியங்களின் தனித்துவமான கலைநயத்தை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.

திருமண ஆபரணங்களைத் தாண்டி, தனிஷ்க்கின் ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச்’  திட்டம் மிகச் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு நகைக்கடையில் வாங்கிய தங்க நகையாக இருந்தாலும், வாடிக்கையாளரின் முன்னிலையிலேயே முழுமையான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு செயல்முறை மூலம் அது சோதிக்கப்படுகிறது. எவ்வித மறைமுகக் கழிவுகளும் இன்றி பழைய நகைகளுக்கான முழு மதிப்பு வழங்கப்படுகிறது.

பண்டிகைக் கால வெளியீடு குறித்து தனிஷ்க் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைமை அதிகாரி பெல்கி ஷெரிங் தெரிவிக்கையில், "தீபாவளி என்பது நேர்மறை எண்ணங்களையும், புதிய தொடக்கங்களையும் கொண்டாடும் உன்னதமான தருணம்; எனவே இது தனிஷ்க் நிறுவனத்திற்கு மிகவும் அர்த்தமுள்ள ஒரு பண்டிகையாக இருந்து வருகிறது. 'ரிவா வெட்டிங் சிக்னேச்சர்ஸ்' வாயிலாக, தென்னிந்திய திருமணங்களின் தனித்துவமான நகை மரபுகள், கைவினைத்திறன் மற்றும் பிராந்தியக் கலாச்சார நுணுக்கங்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கோயில் நகைகளின் நுணுக்கமான அம்சங்களின் தாக்கத்தினால் உருவான நுட்பமான கைவினை வேலைப்பாடுகள் முதல் பாரம்பரிய தங்க வடிவங்கள் மற்றும் ரத்தினக் கற்களின் செழுமை வரை, ஒவ்வொரு மணப்பெண் நகைத் தொகுப்பும் இந்த பிராந்திய மரபுகளின் காலத்தால் அழியாத அழகை சமகாலப் பார்வையில் பிரதிபலிக்கிறது. இந்த பண்டிகைக் காலத்தில், வாழ்க்கையின் சிறப்பு வாய்ந்த தருணங்களில் நகைகள் வகிக்கும் அர்த்தமுள்ள பங்கை நாங்கள் கொண்டாடுகிறோம்; இது பாரம்பரியம், கைவினை நேர்த்தி மற்றும் தனிநபர் சுய வெளிப்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது"* என்றார்.

தமிழ்நாட்டில் பண்டிகைக் கால மற்றும் திருமண நகைகள் வாங்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்றும் வகையில், பிரத்தியேகச் சலுகைத் தொகுப்பைத் தனிஷ்க் அறிவித்துள்ளது. இச்சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்க நகைகளின் ஒவ்வொரு கிராமுக்கும் நேரடித் தள்ளுபடியாக ரூ.301 பெறலாம். மேலும், தங்க நகைகளின் செய்கூலி மீதும் மற்றும் வைரத்தின் மதிப்பின் மீதும் 20% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்துடன், புதிய மாடல் நகைகளுக்குத் தரம் உயர்த்திக்கொள்ள பழைய தங்கத்தை மாற்றும்போது, கூடுதல் 1 காரட் மதிப்பு வழங்கப்படும். இச்சிறப்புச் சலுகைகள் அக்டோபர் 10 முதல் நவம்பர் 8, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும், என்று தனிஷ்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form