புதிய டிவிஎஸ் ரைடர் அறிமுகம்


டிவிஎஸ் வேணு குழுமத்தின் ஓர் அங்கமும், இருசக்கர மற்றும் மூன்றுசக்கர வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமுமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் , தனது புகழ்பெற்ற டிவிஎஸ் ரைடர் டிஎஃப்டி டிடி  மற்றும் டிவிஎஸ் ரைடர் எஸ்எக்சி டிடி ஆகிய மாடல்களில் அதிநவீனப் பாதுகாப்பு வசதிகளை அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சாலையில் வாகனம் சறுக்கி விழாமல் கட்டுக் கோப்பாக ஓட உதவும் ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம்  மற்றும் பின்னால் வருபவர்களை எச்சரிக்கும் எமர்ஜென்சி பிரேக் வார்னிங் போன்ற பிரத்தியேகப் பாதுகாப்பு அம்சங்களை ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம், 125cc பைக் சந்தையிலேயே புதிய வரலாற்று மைல்கல்லை டிவிஎஸ் ரைடர் எட்டியுள்ளது. பெரிய பைக்குகளுக்கு மட்டுமே உரிய நவீன தொழில்நுட்பங்களை, சாமானிய மக்களும் தினசரி பயன்படுத்தும் வகையில் எளிதாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற டிவிஎஸ்ஸின் உன்னத நோக்கத்திற்கு இந்த புதிய வெளியீடு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

எதிர்பாராத மற்றும் சவாலான சாலைகளில் பயணிக்கும் போது இப்புதிய பாதுகாப்பு அம்சங்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படுகிறது. 125cc மோட்டார் சைக்கிள் பிரிவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், சாலைகளில் உள்ள குழிகள், உருண்டு கிடக்கும் ஜல்லிக் கற்கள் அல்லது ஈரப்பதமான வழுக்கும் பரப்புகளில் பின்புற சக்கரம் பிடிப்பை இழக்கும் இக்கட்டான தருணங்களில், வாகனத்தின் கட்டுப்பாட்டைத் தக்கவைக்க ரைடர்களுக்கு உறுதுணையாகச் செயல்படுகிறது.

திடீரென பிரேக் பயன்படுத்தும் அவசரத் தருணங்களில், பின்னால் வரும் வாகன ஓட்டிகளை உடனடியாக எச்சரிக்கும் 'எமர்ஜென்சி பிரேக் வார்னிங்' வசதி, அன்றாடப் பயணப் பாதுகாப்பிற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. இது பின்னால் வருபவர்கள் சுதாரித்து கொண்டு தங்களது வாகனத்தை கவனத்துடன் ஓட்டுவதற்கும், மோதல்களைத் தவிர்ப்பதற்கும் தேவையான கூடுதல் அவகாசத்தை வழங்குகிறது. ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம்  மற்றும் எமர்ஜென்சி பிரேக் வார்னிங் ஆகிய இரு முக்கிய அம்சங்களும் இணைந்து, தனது பிரிவிலேயே இத்தகைய மேம்பட்ட செயல்முனைவுப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை  வழங்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய தனித்துவமான மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக டிவிஎஸ் ரைடரை நிலைநிறுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பாதுகாப்பு அம்சங்களுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், இதில் பொருத்தப்பட்டுள்ள அகலமான பின்புற டயர், மேம்பட்ட சாலைப் பிடிப்பையும் (Grip) வாகனத்திற்கு சிறந்த நிலைத்தன்மையையும் (Stability) வழங்குகிறது. அதேபோல், பயண இடைவேளைகளில் ரைடர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை மின்னல் வேகத்தில் சார்ஜ் செய்துகொள்ள வசதியாக, 27W யுஎஸ்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது அன்றாடப் பயணத்தை செளகரியமாக்குகிறது.  ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் எமர்ஜென்சி பிரேக் வார்னிங் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும் இந்த அம்சங்கள், சாலைகளில் வாகனத்தின் ஸ்திரத்தன்மை, பிரேக்கிங் தொடர்பான எச்சரிக்கை மற்றும் அசைக்க முடியாத சமநிலையை உறுதிசெய்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு பயணத்திலும் ரைடர்கள் கூடுதல் தன்னம்பிக்கையுடனும் பாதுகாப்புடனும் சவாரி செய்ய உதவுகிறது.

இதில் பொருத்தப்பட்டுள்ள ஆற்றல்மிக்க 3-வால்வ் செயல்திறன் என்ஜின், விரைவான முடுக்கத்தை  வழங்கும் 'பூஸ்ட் மோடுடன்' கூடிய iGO அசிஸ்ட் தொழில்நுட்பம், குறைந்த வேகத்தில் நெரிசலான சாலைகளிலும் இலகுவாக வாகனத்தை இயக்க உதவும் கிளைடு த்ரூ டெக்னாலஜி, மற்றும் 99-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் இணைப்பு தொழில்நுட்ப வசதி, ரைடர்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் டிஎஃப்டி திரை ஆகிய அம்சங்கள் புதிய வாகனத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றன.

ரைடர்களின் உண்மையான தேவைகளை மையமாகக் கொண்ட அர்த்தமுள்ள தொழில்நுட்ப மேம்பாடுகள் வழியே, 125cc மோட்டார் சைக்கிள் பிரிவை டிவிஎஸ் ரைடர் எவ்வாறு தொடர்ந்து மறுவரையறை செய்து வருகிறது என்பதற்கு இந்தப் புதிய டிவிஎஸ் ரைடர் வாகனம்  மிகப் பொருத்தமான உதாரணமாக இருக்கிறது.

புதிய டிவிஎஸ் ரைடர் டிஎஃப்டி டிடி மாடலின் விலை ₹1,03,170 ஆகவும், புதிய டிவிஎஸ் ரைடர் எஸ்எக்சி டிடி  மாடலின் விலை ₹1,00,330 ஆகவும் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய மோட்டார் சைக்கிள்கள் நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டிவிஎஸ் மோட்டார் டீலர்ஷிப்களிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

கூடுதல் விவரங்களை அறிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் <https://www.tvsmotor.com/tvs-raider> என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்வையிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form